பக்கம்:பாரதித் தமிழ்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பாரதி தமிழ்

ஜிந்தாமியான் சேட் : ஹோஷ்யார்! எலிக்குஞ்சு செட்டியார் : நம்முடைய கடை யிலே உம்மைப் போலவே நாலு முரடர் வேலைக்கு வைத் திருக்கிறேன். ஞாபகமிருக்கட்டும்.

ஜிந்தாமியான் சேட் : ஹோஷ்யார்! ஹோஷ் uufrff!

எலிக்குஞ்சு செட்டியார் : என்ன காணும், வெகு பயமுறுத்துகிறீரே. யாரென்று நினைத்தீர் நம்மை? (என்று சொல்லிக் கொண்டு எலிக்குஞ்சு செட்டியார் எழுந்து நின்று கையை ஓங்கினர்.)

சபையார் கலீரென்று சிரித்தார்கள். ஏனென் ருல், எலிக்குஞ்சு செட்டியார் 4: அடி உயரம். ஜிந்தாமியான் ஸேட் 6 அடி உயரம். செட்டியார் 14 அடி அகலம். லேட் 34 அடி அகலம். செட்டியா ருக்கு வயது 55. ஸேட்டுக்கு வயது 33.

இந்தச் சமயத்தில் காளிதாஸன் எழுந்து, ‘உல்லாலத்திற்கு ஒரு அளவிருக்கவேணும். வரை கடந்து போகலாகாது. செட்டியாரே உட்காரும்,... என்னைச் சபையிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரேரணை செய்தீர். முகாந்தரங்கள் சொல்லும்’ என்றார்.

குமாரசாமி வாத்தியார் : ஆமாம், காரணம் சொல்லும். காரணம்?

எலிக்குஞ்சு செட்டியார் : நமது சபையின் காரியங்களை வாரந்தோறும் சென்னப்பட்டணத்துப் பத்திரிகையில் பிரசுரம் செய்யும்படி நாம் காளி தாஸரை நியமித்தோம். அதன்படியே அவர் முதலாவது கூட்டத்து விவஹாரங்களைச் சுதேச மித்திரன் பத்திரிகைக்கு எழுதினர். அதற்கப்பால், கடந்த கூட்டங்களில் ஒன்றைப் பற்றியேனும் எழுத