பக்கம்:பாரதித் தமிழ்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


170 பாரதி தமிழ்

எப்படி யென்றால், இதுவரை உலகத்துக் கவிகள் நமது நவீன நகரங்களிலேயுள்ள யந்திர ஆலைகள், மோட்டார் வண்டிகள் முதலிய வஸ்துக்களைத் தமது கவிதையிலே சேர்ப்பதில்லை. இந்த வஸ்துக்களிலே அழகில்லேயாதலால் கவிதையிலே சேர்க்கத் தகா தன என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். வானம், காற்று, நீர், வனம், மலை, பெண், செல்வம், மது, தெய்வம், தவம், குழந்தை முதலிய அழகு டைய வஸ்துக்களையே கவிகள் வர்ணிப்பது வழக்கம், எமீல் வெர் ஹேரன் என்பவருடைய கொள்கை யாதென்றால்:-"வலிமையே அழகு, ஒரு பொருளின் வெளியுருவத்தைப் பார்த்து அது அழகா இல்லேயா என்று நீர்மானம் செய்யலாகாது. யந்திரங்களிலே வலிமை நிகழ்கின்றன. ஆதலால் அவை அமுகுடை யன. அவற்றைக் கவி புகழ்ச்சி செய்தல் தகும்.”

காளிதாஸன் : வலிமை ஒர் அழகு. அழகு ஒரு வலிமை. யந்திர ஆலை, நீராவி வண்டி, நீராவிக் கப்பல், வானத்தேர், பெரிய பீரங்கி எல்லாம் அழகு தான். உயர்ந்த கவிகள் வலிமையுடைய பொருள் களே அவ்வக் காலத்தில் வழங்கிய வரையிலே வர்ணனை செய்து தான் இருக்கிறார்கள். இதிலே புதுமையொன்றுமில்லை. வ்லிமைக் கருவிகள் இப் போது சில புதுமையாகத் தோன்றியிருக்கின்றன. இவற்றை ஐரோப்பியக் கவிகள் விலக்கி வைத்தது பிழை. ஆஞ்ல் பழைய தெய்வத்தையும், இயற்கை யையும் மறந்து யந்திரங்களைப் பாடத் தொடங் கினல் விதை செத்துப் போய்விடும்.

எலிக்குஞ்சு செட்டியார் : அது கிடக்கட்டும். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதை ஆலோசனை பண்ணுங்கள். காக்கைக்கு 100 வயதென்று சொல்லு கிறார்கள். அது வாஸ்தவமானல், கெயவத்துக்குப் புத்தியில்லையென்று நான் சொல்லுகிறேன். காக்