பக்கம்:பாரதித் தமிழ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வாழ்க்கை வரலாறு


1904-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலே ஒருநாள், அது மிக நல்ல நாள். தமிழன்னையின் உள்ளம் களிப்பெய்த மலர்ந்த ஒரு புனிதத் திருநாள் அது. அன்று தான் பாரதியார் தமது உண்மையான இலக்கிய வாழ்வைத் தொடங்க மதுரையம்பதியை விட்டுச் சென்னைமாநகருக்கு புறப்பட்டார். சென்னையை நோக்கி ரெயிலிலே வந்துகொண்டிருந்த அவரருளத்திலே என்னென்ன எண்ணங்கள் வந்துகொண்டிருந்தனவோ யார் அறிவார்கள் ! எட்டையபுரத்தை விட்டு வந்து மதுரையிலே சிறிது காலத்திற்கு மேற்கொண்ட தமிழாசிரியர் வேலையை நினைத்துச் சிரிப்பும் இடையிடையே தோன்றியிருக்கவேண்டும். தமிழாசிரியர் வேலை தாழ்ந்தது என்பதற்காகவல்ல. ஆனால் அவருடைய இயல்பிற்கும் அந்தக் காலத்திலே தமிழாசிரியர் தொழில் இருந்த நிலைமைக்கும் அவ்வளவு பொருத்தமில்லை என்பதை நினைத்தே அவர் புன்னகை செய்திருக்க வேண்டும் சில மாணவர்களுக்குத் தமிழினிடத்தே பக்தியையும், தேசத்தினிடத்தே பக்தியையும் உண்டாக்குவதை விடுத்துத் தமிழ்நாட்டிற்கே அவ்வித பக்தியை உண்டாக்க அவர் புறப்பட்டுவிட்டார்.

பாரதியார் 1904-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தேதியன்று, மதுரையிலுள்ள சேதுபதி உயர்தரப் பள்ளியில் தமிழாசிரியரானார். இது தாற்காலிக

பா. த.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/17&oldid=1539851" இலிருந்து மீள்விக்கப்பட்டது