பக்கம்:பாரதித் தமிழ்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உல்லாஸ் சபை 171

கைக்கு 100 வயது, மனிதனுக்கும் 100 வயதா? அதிலேகூட மனிதனைவிடக் காக்கையின் வயது கொஞ்சம் அதிக நிச்சயமாகத் தோன்றுகிறது. இதென்ன படைப்பு?

குமாரசாமி வாத்தியார் : எலிக்குஞ்சு செட்டி யாரே, உமக்கு இப்போது வயது 55 ஆகிறது. இதஞல் என்ன பிரயோஜனம்? காக்கை ஊரிலுள்ள அசுத்தங்களையெல்லாம் நீக்கி இயன்றவரை வியாதி களைக் குறைத்து மனிதருக்கும் மற்ற ஐந்துக் களுக்கும் நன்மை செய்கிறது. நீர் பை, பையாகப் பணத்தை உள்ளே போட்டு மூடி வைத்திருக்கிறீர். போன மாதம் ஒரு அவலரத்துக்காக 50 ரூபாய் கடன் கேட்டேன். பொய் முகாந்தரம் சொல்லி மழுப்பிவிட்டீர். உம்மால் யாருக்கென்ன பிரயோ ஜனம்?

எ லிக்குஞ்சு செட்டியார் : உம்மாலே உலகத் துக்கு என்ன நன்மை காணும், குமாரஸாமி வாத்தி யாரே? அதை முதலாவது சொல்லும்........

இப்படி வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கும் போது, எலிக்குஞ்சு செட்டியார் வீட்டு வேலைக் காரன் ஒருவன் வாயில் நுரை தள்ளும்படி ஒடி வந்து, ‘ஐயா, நம்ம வீட்டு வைக்கோல் போரிலே நெருப்புப் பற்றிக் கொண்டு எரிகிறது” என்று சொன்னன் .

நெருப்பா?’ என்று செட்டியார் உடனே எழுந்து ஓடினர். சபையைக் கலைத்துவிட்டு நாங்க ளெல்லோரும் செட்டியாருக்கு உதவி செய்யும் பொருட்டு அவர் வீட்டுக்குப் போளுேம். அங்கே போய்ப் பார்க்கும்போது........அது மற்றாெரு நாட் கதை. இன்று கதை இத்துடன் முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/170&oldid=605450" இலிருந்து மீள்விக்கப்பட்டது