பக்கம்:பாரதித் தமிழ்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்

சி. சுப்ரமணிய பாரதி

8 ஏப்ரில் 1916 ராr.ல பங்குனி 22

கல்கத்தாவிலிருந்து வெளிப்படும் மாடன் ரெவ்யூ என்ற மாதப் பத்திரிகையின் தை-மாசி ஸஞ்சிகையை நேற்றுப் பொழுது போக்கின் பொருட் டாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலே திருநெல்வேலி ஹிந்து காலேஜ் சரித்திர பண்டிதர் பூரீ நீலகண்டையர் ஒரு சிறிய கடிதமெழுதி யிருக்கிறார். ஏற்கெனவே மேற்படி பத்திரிகையில் பூரீயதுநாத ஸர்க்கார் என்ற வித்வான் எழுதியிருந்த சில வார்த்தைகளைக் குறித்து பூரீ ஐயர் தமது கருத் துக்களை வெளியிடுகிரு.ர்.

கலாசாலையிலே சரித்திரப் பாடங்களை இங்கி லீஷில் கற்றுக் கொடுப்பது பயனில்லாத வீண் தொல்லையாக முடிகிறதென்றும் தேச பாஷை களிலே கற்றுக் கொடுத்தால் நல்ல பயன் விளையு மென்றும் ரீ சர்க்கார் தமது அனுபவத்திலே கண்ட் செய்தியைச் சொன்னர். அதற்கு நமது திருநெல் வேலிப் பண்டிதர் சொல்கிறார்:-"பாஷைத் தொல்லை பெருந் தொல்லையாகவே இருக்கிறது. ஆனல் எனது ஜில்லா, எனது காலேஜ் சம்பந்தப்பட்ட வரையிலே பிள்ளைகளுக்குச் சரித்திரப் பாடம் இங்கிலீஷிலே கற்றுக் கொடுப்பதைக் கா ட் டி லு ம் தேச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/172&oldid=605453" இலிருந்து மீள்விக்கப்பட்டது