பக்கம்:பாரதித் தமிழ்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பாரதி தமிழ்

பாஷையில் கற்றுக் கொடுப்பது அதிக பயன்படு மென்று சொல்வதற்கில்லை. எனது மாளுக்கர் களிலே பெரும்பாலோர் இங்கிலீஷ் இலக்கணப் பிழைகளும் வ்ழக்குப் பிழைகளும் நிறையச் செய்த போதிலும் மொத்தத்திலே தமிழைக் காட்டிலும் இங்கிலீவுை நன்றாக எழுதுகிரு.ர்கள். சரித்திர விவு யங்களே வியவஹரிக்கும்போது எனக்கும் இங்கிலீஷ் தான் தமிழைக் காட்டிலும் நன்றாகச் சொல்ல வருகிறது.’

இங்கனம் எழுதுகிற பூ நீலகண்டையரின் நிலை மையை நினைத்து நான் மிகவும் வருத்தப் படு கிறேன். சொந்த பாஷையை நேரே பேசத் தெரியாத வர்கள் சாஸ்திர பாடங்கள் நடத்தும் விநோதத்தை இந்தத் தேசத்திலேதான் பார்த்தோம். புதுமை! புதுமை!! புதுமை!!!

மேலும் இவர் தமக்குத் தாய் மொழி தெரியா தென்ற செய்தியை வங்கப் பத்திரிகைக்கு ஏன் எழுதப் போனார் என்பது எனக்கு அர்த்தமாக வில்லை. ஜப்பானியர், சீனர், நார்வேக்காரர், ஸ்விஸ் ஜாதியார், இத்தாலி தேசத்தார், ஹாலந்துக்காரர் முதலிய உலகத்து ஜாதியாரெல்லாம் நம்மை அ விலும் சாஸ்திரங்களிலும் பாஷைத் திறமையிலும் தாழ்வென்று நினைத்து வந்தார்கள். இப்போது தான் ஹிந்து ஜாதியாராகிய நாம் காட்டு மனித ரில்லை, வாலில்லாத குரங்குகளில்லை, நமக்குப் பாஷைகள் இருக்கின்றன; நமக்குள்ளே சாஸ்திர விற்பன்னர்கள் இருக்கிரு.ர்கள்: கவிகள் இருக் கிறார்கள் என்று நம்மவரிலே சிலர் வெளியுலகத் தார் தெரிந்துகொள்ளும்படி செய்து வருகிறார்கள். இதற்குள்ளே தமிழ் வகுப்பு மற்ற ஹிந்துஸ்தானத்து வகுப்புக்களைக் காட்டிலும் குறைவுபட்டதென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/173&oldid=605454" இலிருந்து மீள்விக்கப்பட்டது