பக்கம்:பாரதித் தமிழ்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெண்கள் சர்வகலா சங்கம் 177

ல்ை காரியசித்திக்குத் தகுதி பெற்றவர். வீண் படாடோபமும் ஆடம்பரமும் இல்லாதவர். உண் மையான தேசாபிமானி. அநாதைக் கைம் பெண் களுக்கு இவர் செய்திருக்கும் நிலையான உபகாரம் நம்மவர்களால் மறக்கக் கூடியதன்று.

ஸ்திரீகளுக்கென்று தனியான யூனிவர்சிடி இதற்கு முன் பூமண்டலத்திலேயே இரண்டுதான் இருக்கின்றன. ஜெர்மனியில் லைப்ஜிக் பட்டணத் திலே ஒன்றிருக்கிறது. ஜப்பானில் ஒன்றேற்பட் டிருக்கிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலே இந்தக் காரியத்தை முதலாவது பூரீ கார்வேதான் ஆரம்பம் செய்கிரு.ர்.

ஒரு காரியத்தைத் தொடங்குவோன் அதன் சம்பந்தமான விஷய நுட்பங்கள் தெரிந்தவனுகவும் விடாமுயற்சி யுடையவனாகவும் இருந்தால் அந்தக் காரியம் எப்படியும் கைகூடிவிடும். பொதுவாக எல்லா தேசங்களிலும் அநேக நற்காரியங்கள் பண மில்லாமல் முறிந்து போவது வழக்கம். அதிலும் நமது தேசம் உலக முழுவதிலுமுள்ள எல்லா நாடு களைக் காட்டிலும் இப்போது அதிகஏழைமை கொண் டிருப்பதால் இங்கே பணமில்லாமல் உடைந்து போன காரியங்களுக்கு அளவில்லை. இருந்தபோதி லும் தர்மதீரர் இதைப்பற்றிக் கவலைப்படமாட்டார் கள். அறிவும் மன உறுதியும் சேர்ந்தால் வானத்தை வெல்லலாம். லெளகிக காரியங்கள் சாதிப்பது எம்மாத்திரம்? பூரீ கார்வேயின் பிரயத்தனத் திற்குப் பணம் போதுமான வரை சேர்ந்து கொண்டுதான் வருகிறது. பூவிைலே ஒருவர் தமது வீட்டை விற்று 10,000 ரூபாய் கொடுத்ததாகத் தெரிகிறது. பூர் கார்வே ஏற்படுத்தப் போகிற சர்வ கலா சங்கத்தில் தேச பாஷைகளின் மூலமாகவே சகல சாஸ்திரங்களும் கற்றுக் கொடுக்கப்படும். இவ

பா. த.-12