பக்கம்:பாரதித் தமிழ்.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


178 பாரதி தமிழ்

ருடைய சர்வகலாசங்கம் ஸ்தாபனமாகிப் பத்து வருஷம் நடக்குமானல் அதுவரை நம் நாட்டு ஆண் பள்ளிக்கூடங்களில் இங்கிலீஷ் பாஷை மூலமாகவே கல்விப் பயிற்சி நடந்து வருமானல் பிறகு நமது நாட்டில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் உயர்ந்த கல்வியும் அறிவுத் திறமையும் சாஸ்திரப் பழக்கமும் பெற்றிருக்கும்படி நேரிடும். அந்த நிலை ஏற்படு முன்னகவே ஆண் பள்ளிக்கூடங்களிலும் சுதேச பாவுைகளின் பழக்கம் அதிகப்பட்டு விடுமென்று நம்புகிறேன்.