பக்கம்:பாரதித் தமிழ்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்ரு

குறிப்பு:-சக்திதாஸன் என்ற புனே பெயரில் இத் தலைப்பிலே பாரதியார் தொடர்ச்சியாக ஆறு கட்டுரைகள் எழுதியிருக்கிரு.ர். இவை வெளியான தேதிகளாவன:

1. 3 மே 1916--நள வித்திரை 21 2. 1 மே 1916-தள த்ெதிரை 22 3. 11 மே 1916-நள சித்திரை 29 4. 27 மே 1916-நள வைகாசி 14 5. 10 ஜூன் 1916-நள வைகாசி 28

6

. 19 ஜூலை 1917-நள ஆடி 5

நவ ரஸங்களைப் பற்றியும் இக்காலத்துச் சங்கீதத்தைப் பற்றியும் பல ஆழ்ந்த கருத்துக்களேப் பாரதியார் இக்கட் டுரைகளிலே தந்திருக்கிரு.ர்.

“'ரஸ் ஞானமில்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனங்களும் பாடுவ்ோர் ஸங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிரு.ர்கள். இக்காலத்து சங்கீத வித்வான்களிலே பலர் ஸங்கீதத்துக்கு நவரஸங்களே உயிர் என்ற செய்தியை அறியாதவர்கள்.

முத்துசாமி தீசுழிதர். தியாகையர், பட்டணம் சுப்பிர மணிய ஐயர் முதலியவர்களின் கீர்த்தனங்களிலே சிலவற்றை அதிக ஸ்ங்கதி'களுடன் பாடுவோரே “முதல்தர வித்வான் கள். இந்தக் கீர்த்தனங்களெல்லாம் ஸம்ஸ்க்ருதம் அல்லது தெலுங்கு பாஷையிலிருக்கின்றன. ஆகவே முக்காலே மும் மாகாணி ‘வித்வான்'களுக்கு அந்தக் கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது. எழுத்துக்களையும் பதங்களையும் கொலை செய்தும் விழுங்கியும் ப்ாடுகிறார்கள். அர்த்தமே தெரியா தவர்களுக்கு ரஸம் தெரிய நியாயமில்லை.”

  • 棕 景
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/178&oldid=605461" இலிருந்து மீள்விக்கப்பட்டது