பக்கம்:பாரதித் தமிழ்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பாரதி தமிழ்

‘நானும் பிறந்தது முதலாக இன்று வரை பார்த்துக் கொண்டு வருகிறேன். கச்சேரி தொடங்குகிறது. வித்வான் ‘வாதாபி கணபதிம் என்று ஆரம்பஞ் செய்கிறார். ராம நீ ஸ்மானமெவரு’, “மரியாத காதுரா’, ‘வரமு லொஸதி’...... ஐயையோ, ஐயையோ, ஒரே கதை.

‘எந்த வித்வான்’ வந்தாலும் இதே கதைதான். தமிழ் நாட்டு ஜனங்களுக்கு இரும்புக்காதாக இருப்பதால்,திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாட்டுகளே வருஷக் கணக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோற் காதுள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.’

பாரதியார் இவ்வாறு கூறி முப்பத்தைந்து ஆண்டு களுக்கு மேலாகிவிட்டன. நிலைம்ை மட்டும் அநேகமாக அப்படியே இருக்கிறது!

பூர்வீக மகான்களுடைய பாட்டுக்களே மறந்துவிட வேண்டுமென்பது பார்தியாருடைய கட்சியல்ல. ‘பத்து முப்பது கீர்த்தனங்களையே ஓயாமல் பாடி ஸங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்துவிடக் கூடாது என்பது அவர் கருத்து. தமிழிலே புதிய புதிய நல்ல பாடல்கள் உண்டாக வேண்டும்: அவை இசையரங்குகளிலே முக்கிய இடம் பெறவேண்டும் என்பதும் அவர் ஆசை.

‘வித்வான்கள் பழைய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணிப் புராதன வழிகளைத் தெரிந்து கொள்ளுதல் அவ சியம். ஆனல் தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தந் தெரியாத பிற பாஷைகளில் பழம் பாட்டுக்களை மீட்டு மீட்டும் சொல்லுதல் நியாயமில்லை. அதனால் நமது ஜாதி ஸங்கீத ஞானத்தை யிழந்து போகும்படி நேரிடும்.’

இக்கட்டுரைகள் பாரதி நூல்கள் முன்றாம் தொகுதியில் கலகள் என்ற பகுதியில் லங்கித விஷயம், பெண்ணின் பாட்டு என்ற தலைப்புகளுடன் வெளியாகியுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/179&oldid=605462" இலிருந்து மீள்விக்கப்பட்டது