பக்கம்:பாரதித் தமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பாரதி தமிழ்



மாகக் கிடைத்த வேலை. இந்த ஆசிரியர் பணியை மூன்று மாதம் பத்து நாட்கள் அதாவது 1904 நவம்பர் 10-ஆம் தேதி வரை செய்துவிட்டுச் சென்னையை நோக்கிப் புறப்பட்டிருக்கிரு.ர்.”

தமிழாசிரியராக அவருக்கு மாதம் 17 ரூபாய் சம்பளம் கிடைத்தது.

பாரதியார் தமது இருபத்திரண்டாவது வயதிற்குள் சமஸ்தானப் புலவர், தமிழாசிரியர் ஆகிய இரண்டிலும் ஈடுபட்டு அவை இரண்டையும் தள்ளிவிட்டுப் பத்திரிகைத் தொழிலை நாடிச் சென்னைக்கு வந்தார்.

அவ்வாறு வருவதற்குச் சாதகமாக இருந்த நிகழ்ச்சியைப் பற்றித் திரு.வ.ரா. அவர்கள் மகாகவி பாரதியார் என்ற தமது அழகிய நூலிலே கீழ்க்கண்ட வாறு குறிப்பிடுகிறார்.

“இந்தச் சமயத்தில், சென்னையில் சுதேச மித்திரன் பத்திரிகையை நடத்தி வந்த காலஞ் சென்ற ஸ்ரீமான் சுப்பிரமணிய அய்யர் மதுரைக்குப்

  • இந்த விவரத்தை எனக்குத் தெரிவித்தவர் சேதுபதி உயர்தரப் பள்ளியின் தலைமையாசிரியராகிய திரு. எஸ். நாராயண ஐயர் அவர்கள். எனக்கு அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு :-
                                                                       மதுரை
                                                                      30-3-1953

அன்புடையீர்,

தங்கள் 24-3-53 தேதியுள்ள கடிதம் கிடைத்தது. அதில் குறித்தவாறு பழைய தஸ்தாவேஜிகளைத் தேடிப் பார்த்ததில் காலஞ்சென்ற அமரகவி திரு. சுப்பிரமணிய பாரதியாரவர்கள் 1-8-1984 முதல் 10-11-1904 வரை இப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியிருப்பதாகத் தெரிகிறது. இச்செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                              தங்கள் 
                                                      எஸ். நாராயண ஐயர், 
                                                       தலைமை ஆசிரியர்.

இதே விவரத்தை அந்த உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் திரு. வி. ஜி. சீனிவாசன் அவர்களும் கண்டறிந்து எனக்குத் தெரிவித்தார்கள். இருவருக்கும் என் நன்றி உரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/18&oldid=1539834" இலிருந்து மீள்விக்கப்பட்டது