பக்கம்:பாரதித் தமிழ்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பாரதி தமிழ்

“பேயில்லை’ என்று மறுபடி சொன்னேன்.

“புதுப் பேய்” என்றாள்.

யான் : என்ன வேண்டும்?

அவள் : விளக்கு.

யான் : என்ன விளக்கு?

அவள் : நெய் விளக்கு.

யான் : என்ன நெய்?

அவள் : புலி நெய்.

யான் : எங்கே கிடைக்கும்?

அவள் . காட்டிலே.

யான் : எந்தக் காட்டிலே?

அவள் : பொதியமலைக் காட்டிலே.

எனக்குக் கோபம் வந்துவிட்டது.

காந்திமதி, உனக்குப் புத்தி சரியில்லை. நான் மந்திரத்தால் உன்னைக் குணப்படுத்தப் போகிறேன். கொஞ்ச நேரம் பேசாமலிரு. பேசினால் இந்தப் பிரம்பாலே அடிப்பேன்’ எ ன் று பயமுறுத் தினேன். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து என் கையிலிருந்த பிரம்பைப் பிடுங்கி முறித்தெறிந்து விட்டாள்.

பிறகு மறுபடியும் அலறத் தொடங்கிள்ை:

‘நெய், நெய், நெய் கொண்டுவா. நட, நட. தூங்காதே, எழுந்திரு. நான் புதுப் பேய். எல் லோரும் நெய் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பெண்ணை மிகவும் கஷ்டப்படுத்துவேன்’ என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/183&oldid=605469" இலிருந்து மீள்விக்கப்பட்டது