பக்கம்:பாரதித் தமிழ்.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூநீமான் பூநீநிவாச சாஸ்திரியார் 189

களுக்கு மணம் செய்வித்தார்கள் என்று பூரீமான் பூரீநிவாஸ் சாஸ்திரியார் தாம் அவ்விஷயத்தைப் பற்றி ஏற்கனவே எழுதி வெளியிட்டிருக்கும் புத்தக மொன்றில் ருஜுப்படுத்தியிருக்கிறார். ஆகவே குழந் தைக் கல்யாணம் வேதோக்தமென்றும், தெய்வக் கட்டளையென்றும் இவர் நம்பவில்லை. இடைக் காலத்தில் நம் ஜாதியார் அறிவும், தைரியமும், சக்தியும் இழந்துவிட்ட பிறகு வந்து நுழைந்த அசம் பாவித வழக்கங்களில் இதுவொன்றென்பது பூரீ சாஸ் திரியாரின் கொள்கை. இந்தக் கொள்கையை நமது நாட்டில் எத்தனையோ ஜனங்கள் மனதிற்குள்ளே அங்கீகாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். இங்ஙனம் ஒப்புக்கொண்ட பிறகும் புதிய சீர்திருத்தத்தை நடைமுறையிலே கொண்டு வருவதற்குத் தைரிய மில்லை.

பொதுவாக இங்கிலீஷ் படித்தவர்களிலே பலரும், இங்கிலீஷ் படிக்காவிட்டாலும் விஷயங் களைத் தாமாகவே யோசனை செய்து பார்க்கும் வழக்கமுடைய வேறு பலரும் நமது ஜனக்கட்டிலே எத்தனையோ குற்றங் குறைகள் இருப்பதாக ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனல் அவனவ னுக்கு நியாயமாகத் தெரிந்ததை அவனவன் தனது அனுஷ்டானத்தில் காட்டும் முறைமை நமது நாட் டில் நன்றாக ஏற்படவில்லை. தர்மத்துக்காகத் தாங்கள் ஸ்ங்கடப்படுவதிலே பெரும்பாலோருக்கு ஸம்மதமில்லை. அதுவும் இங்கிலீஷ் படித்த கூட்டத் தாரில் மனேதைரியமுடையவர்களின் தொகை மிகவும் சொற்பமென்பது என்னுடைய அபிப்பிரா யம். உள்ளும் புறமும் ஒன்றுபோல நடக்கவேண்டும். படித்த வித்வான்கள் வஞ்சக நடை நடந்தால் அந்த தேசம் சூன்யமாகிவிடும். மனேதைரியமில்லா விட்டால் பயனுடைய செய்கை எதுவுமே செய்ய ԱՔւգ-Ասո3:1,