பக்கம்:பாரதித் தமிழ்.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பாதி தமிழ்

விதி வசத்தால் நமது ஜனங்களுக்கு இந்த கூடிணத்திலே பல விஷயங்களிலும் வழி காட்டக் கூடிய திறமை இங்கிலீஷ் படித்த சிலரிடத்திலே தான் காணப்படுகிறது. அதற்குக் காரணம் பூமண் டலத்தின் சாஸ்திரங்களும் நவீன யோசனைகளும் நமது பாஷையில் மொழி பெயர்க்கப்படாமல் இருப்பதொன்று; நம்மவர் அன்ய தேசங்களில் யாத்திரை செய்து தற்கால அனுபவங்கள் திரட்டிக் கொண்டு வராமலிருப்பது இரண்டு ; நமக்குள் வந்து புகுந்திருக்கும் கோ ர மா ன வறுமை மூன்றாவது.

எனவே, இந்தக் கூட்டத் தாரில் சிலர் கொஞ்சம் துணிவாகச் செய்கைகள் செய்வதைக் காணும்போது ஆரம்பத்தில் சொல்லியபடி எனக்கு ஸ்ந்தோவு முண்டாகிறது. இப்படி நம்மவர் எல்லா விஷயங் களிலும் நியாயத்தைத் துணிவுடன் செய்து காட்டி நாட்டில் புதிய உயிரை நிலை நிறுத்தும்படி தேவ கருணை செய்க.