பக்கம்:பாரதித் தமிழ்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதியார் வாழ்க்கை வரலாறு Íß.

போய்ச் சேர்ந்தார். அப்பொழுது சுப்பிரம்ணிய அய்யர் பாரதியாருக்கு அறிமுகமானர். பாரதி யாரின் மேதையை அவர் உடனே தெரிந்து கெர்ண் டார். உள்ளுர அவருக்கு ஆனந்தம். எப்படியாவது பாரதியாரைச் சென்னைக்குக் கொண்டு பேர்ய் விடுகிறது என்று அய்யர் தீர்மானங் கொண்டார். பாரதியாரின் மேதையை நேரில் கண்ட அய்யர், சென்னைக்கு வரும்படி பாரதியாரை வேண்டிக் கொண்டார்.”

திரு. ஆக்கூர்-அனந்தாச்சாரி அவர்கள் கவிச் சக்கரவர்த்தி சுப்பிரமண்ய பாதி சரிதம் என்ற ஒரு நூலை 1936-லேயே வெளியிட்டுள்ளார்கள். அதில்ே அவர் கூறுவதாவது :

“எவருக்கும் கட்டுப்படும் சுபாவம் பாரதியா ரிடம் இல்லாததன் காரணமாக 1904-ம் வருடம் எட்டையபுரம் சமஸ்தானத்திலிருந்து வி ல் கி க் கொள்ள நேரிட்டது. _ பிறகு மதுரை சென்று அங்கு மூன்று மாத காலம் சேதுபதி உயர்தரப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்தார். அவருக்கு வேறெத் தொழிலேனும் மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் மேலிட்டது. சென்னைப் போதன முறைக் கல்லூரி வைஸ் பிரின்சிபாலும் தமது உற்வினருமர்ன லகங்மண அய்யருக்கு இவ் விஷயத்தைப் பற்றி எழுதினர். லக்ஷ்மண அய்யர் தமது நண்பரொருவர் மூலம் சுதேசமித்திரன் காரியாலத்தில் பாரதியாருக்கு வேலை ஏதாவது கிடைக்குமாவென விசாரித்தார். அவ்வமயம் உதவி ஆசிரியர் ஸ்தானம் காலியாக விருப்பதை அறிந்து பாரதியாரைச் சென்னைக்கு வரவழைத்து மிகுந்த திபார்சின்பேரில் சுதேச மித்திரனில் வேலைக்கமர்த்தினர்.”

திரு. ர. அ. பத்மநாபன் அவர்கள் சித்தி பாதி என்ற தமது நூலில் வேறுகருத்துத் தெரிவிக்கின்றார்.