பக்கம்:பாரதித் தமிழ்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூச்சித் தேவன்

ஒரு சிறிய கதை

காளிதாலன்

27 n23&o 19i G தள ஆடி 13

திருநெல்வேலி வட்டத்தில் குட்டையூர் என் றொரு ஜமீன் உண்டு. அங்கே ஜனங்களெல்லாம் மிகவும் ஏழைகள். மறவர் குடி 200, 300 வீடுக ளுண்டு. மற்ற குடிகளைக் காட்டிலும் இந்த மறவர் அதிக ஏழைகள். இவர்களில் சிலர் ஜமீன்தாருக்குப் பல்லக்குச் சுமப்போர். அடைப்பக்காரர் சிலர். வெளியே பருத்தி நிலங்களிலே வேலை செய்து பிழைப் பவர் சிலர். அநேகருக்கு வேலை கிடையாது. பக்கத்துக் கிராமங்களிலே போய், திருடிக்கொண்டு வருவார்கள். அதிலும் அதிக வரும்படி கிடைப்ப தில்லை. இந்த இலாகவே ஏழை இலாகா. ஒரிரவு திருடிக்கொண்டு வந்த பொருளில் ஊர்க்காவல் சேவகருக்குப் பாதி கொடுத்தது போக மிச்சம் ஐந் தாறு நாள் ஜீவனத்துக்குக் கூடப் போதாது. சுமார் 25 வருஷங்களுக்கு முன்பு அங்கே ஜமீன்தாராக இருந்த வெள்ளையப்ப நாய்க்கர் இறந்துபோன சமயத்தில், அவருடைய மகனுக்கு 12 வயதுதான் ஆயிருந்தது. ஆதலால், அவனைச் சென்னைப் பட்ட ணத்திலுள்ள ஜமீன்தார்ப் பிள்ளைகளின் பள்ளிக்