பக்கம்:பாரதித் தமிழ்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூச்சித் தேவன்

195



கூடத்தில் சேர்த்துவிட்டு, அவனுக்குத் தகுந்த வயதாகும்வரை ஜமீன் அதிகாரத்தைக் ‘கோட்டா வாசுக்’ (கோர்ட் ஆப் வார்ட்ஸ்) காரர் நடத்த வேண்டுமென்று ஸர்க்கார் அதிகாரிகள் தீர்மானம் செய்தார்கள். திருச்சிளுப்பள்ளியிலே டிப்டிகலெக்டராகவிருந்த துரைசாமி அய்யரைக் ‘கோட்டா வாசுக்’ கார்யஸ்தராக நியமனம் செய்தார்கள். பழைய ஜமீன்தாரை அடுத்துப் பிழைத்தவர்களிலே அநேகருக்குச் சம்பளம் நின்று போய்விட்டது. ஊரிலே கஷ்டம் அதிகப்பட்டது. மறவர் தரித்திரத்தில் முழுதிப் போயினர்; களவுகள் அதிகப்பட்டன; உள்ளுரிலேயே திருடத் தொடங்கி விட்டார்கள். இந்த மறவரில் நமது பூச்சித்தேவன் ஒருவன.

பூச்சித்தேவன் களவுகள்

பூச்சித்தேவன் உடம்பில் நல்ல வலிமையுடையவன். ஆனல் களவிலே நல்ல தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் பெரிய திருடர் இவனைச் சேர்த்துக் கொள்வதில்லை. சிறு சிறு களவுகளிலே இவன் திருப்தி கொண்டிருந்தான். நாளைக்கு வேண்டுமேயென்ற கவலை இவனுக்குக் கிடையாது. அந்தந்த நாள் ஆகாரத்துக்குக் கிடைத்தால் போதும். பெரிய களவுகளிலே சேராதபடியால் இவனை டாணுக்காரர் தொல்லைப்படுத்துவதில்லை. பிராமண வீதிகளுக்கு வருவான். வெளிப்புறத்திலே வேஷ்டிகள், பாட்டிமாருடைய சேலைகள் உலரப் போட்டிருக்கும். ஏதேனுமொன்றை அவிழ்த்துக் கொண்டு போய் எங்கேனும் ஒன்றரையணுவுக்கு விற்று அன்று பகல் போஜனத்துக்கு வழி தேடிக் கொள்ளுவான்.

இராக் கொள்ளை

மேலைத் தெருவின் ஒரத்தில் புன்செய் வெளியை அடுத்த வீட்டில் ஒரு கிழவி தனது பிள்ளையுடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/194&oldid=1539890" இலிருந்து மீள்விக்கப்பட்டது