பக்கம்:பாரதித் தமிழ்.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பாரதி தமிழ்

குடித்தனம் பண்ணிக் கொண்டிருந்தாள். இவ்விரு வருக்கும் அந்த ஊர் சத்திரத்திலிருந்து நாளொன் றுக்கு மூன்று படி அரிசியும், மேல் சாமானும், படிச் செலவாகக் கொடுக்கும்படி பழைய ஜமீன்தார் காலத்தில் ஏற்பாடாயிருந்தது. அது கோட்டா வாசு'க் காலத்திலேகூட நிற்கவில்லை. இவர்கள் வீட்டிலே மண் பாண்டங்களைத் தவிர வேறொரு சாமானும் கிடையாது. இங்கேதான் பூச்சித்தேவன் அடிக்கடி திருட வருவான். நடு நிசியில் கொல்லைக் கதவை எளிதாகத் திறந்துகொண்டு உள்ளே நுழை வான். கூடத்திலே பழஞ் சோற்றுப் பானை வைத் திருக்கும். அதைத் திறந்து பழையதை எடுத்துக் கொண்டு போவான். சத்தத்திலே கிழவி கண் விழித்து விடுவாள். அது யாரடா அங்கே, பாடையிலே போவாய், படக்கென விழுவாய், யாரெங்கே!’ என்று கத்துவாள். “நான்தானம்மா, பூ ச் சித் தே வ ன், பானையைத் தொடவில்லை. கோலாலே கை படாமல் சோற்றை மாத்திரம் துணியிலே கவிழ்த்துக்கொண்டு போகிறேன். போய் வருகிறேனம்மா’ என்று சொல்லிவிட்டுப்போவான். கிழவி வைதுகொண்டே மறுபடி கதவை நேரே அடைத்துவிட்டு வந்து படுத்துக்கொள்ளுவாள்.

சுந்தர ய்யங்கார் வீட்டுச் செம்பு ஒரு நாள் பகல் 2 மணியிருக்கும்; மாடத் தெரு சுந்தரய்யங்கார் வீட்டிலே அவருடைய தாயார் மாத்திரம் தனியாகக் குடியிருந்தாள். அய்யங்காரும் அவருடைய மனைவியும் வெளியூருக்குப் போயிருந் தார்கள். கிழவி வெளித் திண்ணையிலே உட்கார்ந்து ராம ஜபம் பண்ணிக் கொண்டிருந்தாள். அப்போது பூச்சித்தேவன் அங்கே போய், “தாகத்துக்குத் தண்ணிர் கொடுங்களம்மா’’ என்று கேட்டான். கிழவி உள்ளே போய், ஒரு செம்பிலே ஜலம் கொண்டு