பக்கம்:பாரதித் தமிழ்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பாரதி தமிழ்

விட்டுச் செம்பை வாங்கிக்கொண்டு போகிறேன்’ என்று சொன்னன். செட்டி செம்பைக் கையிலே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பூச்சித் தேவன் கோபத்துடன், “என்ன செட்டியாரே, செம்பை அழகு பார்க்கிறீரோ? இதை வைத்துக் கொண்டு கால் ரூபாய் கொடுக்க வலிக்கிறதோ? லெம்மதமுண்டானுல் பா ரு ம். இல்லாவிட்டால் செம்பைக் கொடும் இங்கே, பக்கத்துத் தெரு சோளுசலஞ் செட்டியார் நல்ல மனுஷ்யன். அவர் நமக்குச் செம்பு, கிம்பு வைக்காமல் சும்மா கடன் கொடுப்பார். அவரிடம் வாங்கிக் கொள்கிறேன். நீட்டும், செம்பை நீட்டும் இங்கே” என்றான். கடைச் செட்டி, பொறு தம்பி, பொறு. இதோ கொடுக் கிறேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தான். இந்த சந்தர்ப்பத்திலேதான் சுப்பா சாஸ்திரி அவ்விடம் போய்ச் சேர்ந்தார்.

பூச்சித்தேவனை நோக்கி அதன் மகனே இதன் மகனே என்று சுப்பா சாஸ்திரி சோளுமாரியாக வையத் தொடங்கினர்:

பூச்சித்தேவ்ன், “என்ன சாமி, பயித்தியம் கியித்தியம் பிடிச்சுக்கொண்டதா ? சங்கதி என்ன ? ஏன் வைகிறீர் ? சொல்லும்’ என்றான். “அட அயோக்கியப் பயலே ! சுந்தரய்யங்கார் வீட்டுச் செம்பைத் திருடிக்கொண்டு வ ந் து கடையிலே விற்கப் போகிறாய் ! ஏன் வைகிறேனென்று வேறே கேட்கிருயா ? என்ளுேடு வாடா நீ. டாளுவுக்குப் போகலாம் வா. வாடா நீ, வா’ என்று அட்ட காலம் பண்ணினர் சுப்பா சாஸ்திரி.

பூச்சித்தேவன் கலகலவென்று சிரித்துக்கொண்டு, ‘சாமி, நீர் கூப்பிட்டால் உம்மோடு நானக டாளு வுக்குப் போய் மாட்டிக்கொள்ள வேண்டுமென்று எனக்கு ஆத்திரமா ? புத்தியில்லாமல் பேசுகிறீரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/197&oldid=605491" இலிருந்து மீள்விக்கப்பட்டது