பக்கம்:பாரதித் தமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பாரதி தமிழ்


சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பணி செய்த தமிழ் ஆசிரியர் சண்முகம் பிள்ளையவர்கள் உடல் நலிவு காரணமாக ஒய்வெடுத்துக் கொண்டார். அந்த ஒய்வுக் காலத்திற்கே தாற்காலிகமாக பாரதியார் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஆதலால், அவர் தொடக்கத்திலிருந்தே வேறு வேலை தேடு வதற்கு முயன்றிருக்கிறார். சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் வேலை செய்த அய்யாசாமி ஐயர் என்பவர் இவருக்கு நண்பராவர். அவருடைய தாய் மாமன் ராஜாராமய்யர் என்பவர் ஹிந்து பத்திரிகையின் நிருராயிருந்தார். மதுரைக் கல்லூரிக்கிளை தமிழ் பண்டிதர் கோபாலகிருஷ்ணய்யர் மூலமாக அவரை அணுகி சுதேசமித்திரனில் உதவியாசிரியர் வேலைக்கு ஒரு சிபார்சுக் கடிதம் பெற்றனர். ஜி. சுப்ரமண்ய அய்யருக்கு எழுதிய இக் கடிதத்தின் மூலமாகவே பாரதியாருக்கு சுதேசமித்திரனில் வேலை கிடைத்ததாக அக்கடிதத்தைத் தாமே நேரில் வாங்கி பாரதியிடம் கொடுத்த அய்யாசாமி அய்யர் தெரிவித்தார்.

எப்படியோ 1904-ல் பாரதியார் சென்னை வந்து சுதேசமித்திரன் அலுவலகத்திலே பணியாற்ற அமர்ந்துவிட்டார். வங்க வாழ்த்துக் கவிகள் என்ற அவருடைய பாடல் சுதேசமித்திரனில் 15-9-1905-ல் வெளியாகியிருக்கிறது. சுதேசமித்திரனில் பாரதியார்:எழுதிய முதற்கவிதை இதுவென்றே எனக்குத் தோன்றுகிறது. அதற்கு முந்திய தேதியில் அவர் தமது பெய்ரிட்டுச் சுதேசமித்திரனில் எழுதியதாகக் கவிதையோ, கட்டுரையோ எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. சுதேசமித்திரனில் சேர்ந்த முதல் ஏழெட்டு மாதங்கள் அவர் சாதாரண உதவியாசிரியர் போன்றே தினசரிக் கடமைகளைச் செய்திருக்கலாம். தனியாக வேண்டுமானல் கவிதை எழுதி வைத்திருக்கக்கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/20&oldid=1539912" இலிருந்து மீள்விக்கப்பட்டது