பக்கம்:பாரதித் தமிழ்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூச்சித் தேவன் 201

அபகரித்தான். ஊர் முழுதும் இவனைப் பாவி” என்று பேசத் தலைப்பட்டார்கள்.

(U 11-6)] இப்படியிருக்கையில், அந்தவூர் வடக்குத் தெரு மறவருக்கும் தெற்குத் தெரு மறவருக்கும் ஏதோ ஒரு விஷயமாக ஒரு பெருஞ் சண்டை யேற்பட்டது. தடிகள் கத்திகளுடன் இரண்டு பக்கத்திலுமிருந்து 100, 150 பேர் வந்து கலகம் பண்ணினர்கள். அதிலே பூச்சித்தேவனும் போனதில் விலாப்புறத் திலே பெரிய குத்துக் காயம் ஏற்பட்டது. இதற் கிடையிலே ஸ்ர்க்கார் அதிகாரிகள் இரண்டு பக்கத் தலைவர்களையும் பிடித்து வைத்தார்கள். சிறைச் சாலை வைத்தியர் பூச்சித்தேவனுடைய விலாப்புண் ணைத் தீர்த்து விடுவதற்கு மூன்று மாதங்களாயின. திருநெல்வேலி நியாயஸ்தலத்தில் விசாரணை நடந்து இவனுக்கு ஏழு வருஷ கடுங்காவல் விதிக்கப்பட்டது. சென்னைப் பட்டணத்திலுள்ள பெரிய நியாய ஸ்தவத்தில் முறையீடு (அப்பீல்) செய்துகொண் டான். வக்கீல்களுக்கும் மற்றவர்களுக்குமாகப் பதி ளுயிரம் ரூபாய் செலவாயிற்று. இறுதிவரை இவனுக்கு விடுதலை கிடைக்கவில்லை. கீழ் ஸ்தலத் தின் தீர்ப்பையே பெரிய நியாயஸ்தலத்தில் உறுதிப் படுத்திவிட்டார். ஏழு வருஷம் சிறையிலிருந்து வந்தபின் இவனை ஜமீன்தார் கவனிக்கலில்லை. மிஞ்சி யிருந்த சொற்பப் பொருளை வைத்துக்கொண்டு இப்போது மறுபடியும் பூச்சித்தேவன் என்ற பெயருடன் கூடிய வரை யோக்கியனுகவே ஜீவனம் செய்து வருகிருன்.