பக்கம்:பாரதித் தமிழ்.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சக்தி தர்மம் 205

தாயென்றும் எல்லாத் தேவர்களுக்கும் ஆதாரமான மகாசக்தி என்றும் அந்த நாட்டிலும் அதன்சுற்று வட்டங்களிலுமிருந்தோர் கொண்டாடினர்கள். இயற்கைத் தெய்வமே மஹா சக்தி என்று சொல்லப் படுகிறது. அதனையே பூர்வ காலத்தில் பல்வேறு தேசத்தார் பலபெயர் கூறி ஈஸிஸ் (ஈசி) என்றும், சமாரி யென்றும் துர்க்கை யென்றும் வணங்கி வந்தார்கள்.

அதனை அரசர் வீரதேவதையாகவும், சில இடங் களில் ஸம்ஹார தேவதையாகவும் கொண்டாடினர். பொது ஜனங்கள் அரசர் வழியை அனுசரித்தனர். யோகிகளும், ஞானிகளும், கவிகளும் அதனைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழி லுக்கும் ஆதியான மோனவெளி யென்று போற்றி னர். எல்லாம் ஒன்றுதான். “வாக்கையும் மனதை யும் கடந்த பரம்பொருளை’ ஆணென்று சொன்ன லென்ன, பெண்ணென்று சொன்னலென்ன? தாயென்றாலென்ன, தந்தையென்றா லென்ன? எனினும் தெய்வத்தைக் கருதும்போது, “வாக்கை யும் மனதையும் கடந்த பரம்பொருள்” என்றுமாத் திரம் நினைப்பது பிரயோஜனமில்லை. அது உண்மை யன்று.

“சுத்த அறிவே சிவம். வாஸ்தவந்தான். ஆனுல் இந்த உலகம் என்ன? இதுவும் சிவமே. அறிவுக் கெட்டாதது: பெயர் சொல்ல முடியாதது; ஆதலால் அப்பொருளுக்கு வெறுமே, தத்’ (அது) என்ற பெயர்காட்டி வேதரிஷிகள் போற்றினர். பின் அதையே அதிதி யென்றும், விஷ்ணுவென் றும், ருத்ர னென்றும் ப்ரம்மனஸ்பதி என்றும், இந்திரன், வாயு, ஸஅர்யன், அக்தி, மித்திரன், வரு ணன். பூமி, சிந்து என்றும் பலவகைகளிலே வணங் கிஞர்கள். தெய்வம் உண்டென்பதை எப்படி