பக்கம்:பாரதித் தமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வாழ்க்கை வரலாறு

21


பாரதியாரின் கவிதை ஒன்று மதுரையிலிருந்து வெளியான 'விவேக பாநு' என்ற மாத இதழில் முன்பே வெளியாகியுள்ளது.'தனிமை இரக்கம்’ என்ற தலைப்புள்ள அக்கவிதை 1904 ஜூலை இதழில் வந்துள்ளது. இதுவே அச்சில் வந்துள்ள பாரதியாரின் முதற் கவிதை. இதையவர் எட்டையபுரத்தில் இருந்தபோதே பத்திரிகைக்கு அனுப்பியுளளார்.

சமஸ்தானத்துப் புலவராக இருந்து சமஸ்தானத்துக்கு உகந்த பாடல்களை எழுதுவதில் தொடங்கித் தேசத்துப் புலவராக மாறித் தேசத்துக்கும் தமிழுக்கும் உகந்த பாடல்களே எழுதும் வாய்ப்பைச் சுதேசமித்திரன் பத்திரிகையின் வாயிலாகப் பாரதியார் பெற்றார். அவர் உள்ளத்திலே அரும்பு விட்டுக்கொண்டிருக்கும் தேசீய உணர்ச்சி மலருவதற்கும் சென்னை வாழ்வே ஏற்ற சூழ்நிலையாக அமைத்தது.

ஆளுல் உதவியாசிரியராகவே இருப்பதில் அவருக்குத் திருப்தியேற்படவில்லை. அவருடைய கருத்துக்களையும் புதிய தேசிய உணர்ச்சியையும் யாதொரு தடையுமில்லாமல் வெளியிடுவதற்கு வாய்ப்பேற்படவில்லை. சுதேசமித்திரன் அலுவலகத்திலிருந்தே சக்ரவர்த்தினி என்ற மாத இதழ் வெளியாயிற்று. அதற்கு பாரதியார் ஆசிரியராகயிருந்தார்.

பங்கிம் சந்திரபாபு எழுதிய "வந்தே மாதரம்" என்ற அமர கீதத்தின் தமிழ் மொழி பெயர்ப்போடு அக் கீதத்தைப் பற்றிய விளக்கம் தாங்கிய கட்டுரையொன்று சக்ரவர்த்தினியின் 1905-ஆம் ஆண்டு நவம்பர் இதழில் வெளியாகியிருக்கின்றது.

1906 ஜனவரி 29-ஆம் தேதியில் சுதேச மித்திரனில் வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு கூறிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/21&oldid=1539899" இலிருந்து மீள்விக்கப்பட்டது