பக்கம்:பாரதித் தமிழ்.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


லோகோபகாரம்

சக்திதாஸன் எழுதியது

22 செப்டம்பர் 1916 நள புரட்டாசி 7

ஏற்கெனவே சக்தி தர்மம்’ என்ற மகுடத்தின் கீழ் ஒரிரண்டு விஷயங்கள் எழுதியிருக்கிறேன்.

‘லோகோபகாரம்’ என்றாலும் அதே அர்த்தந் தான். லோகோபகாரமாவது லோகத்துக்கு உப கரணம் அல்லது கருவியாக நடத்தல்.

லோகத்துக்கு உபகாரத்தை அதாவது இனிய செய்கையைச் செய்தல். லோகத்துக்கு இனியது செய்வோன், லோக சக்திக்கு ஒரு கருவியாகவே தொழில் செய்கிருன். சக்தியின் கருவியாக இருந்து தொழில் செய்வதையே சக்தி தர்மம் என்றும் சொல்லுகிருேம். பிறருக்கு நாம் செய்தல் இஃதே யாம்.

லோகத்துக்கு இனியது செய்வோன் தன் உள்ளத்தில் பயம் வைத்துக் கொண்டிருக்கலாகாது. பயம் தீர்வதற்கு வழியென்ன? பகை தீர்ந்தால் பயந் தீரும். பகை தீர்க்கும் வழியென்ன ? நம்முடைய மன்த்தில் பிறர்மீது பகை யெண்ணம் தோன்றாம லிருக்க வேண்டும். பாம்பினிடத்திலே நாம் விரோத புத்தி கொள்ளாவிட்டால் அது நம்மைக் கடிக்காது. இந்த வார்த்தையைப் பரிஹாசம் பண்ணுதல்