பக்கம்:பாரதித் தமிழ்.pdf/212

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


லோகோபகாரம் 213

எளிது. யாரும் செய்யலாம். ஆனல் அது உண்மை. பாம்பைப் பழக்கி வைக்கும் திறமை அன்புக்குண்டு; பாம்பினிடத்தில் கருணை செய்யும் ஞானியைப் பாம்பு கடிக்காது. லோகோபகாரத்தைக் கருதி அந்த ஞானி மனதிலே அன்புடன் அந்தப் பாம்பைக் கோபித்தால் அது அவ்விடம் விட்டு ஒடிப் போய் விடும்.

எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே புத்தன் சொல்லிய தர்மம். மஹான்களெல்லாம் காட்டிய வழி இதுதான். தற்காலத்தில் மனித ஜாதி கூடியவரை நாகரிகப் பட்டிருப்பதால், மிருகங்கள், பrதிகள், பூச்சி, புழு இவற்றால் மனிதனுக்குள்ள பயம் அநேகமாகத் தீர்ந்து போய் விட்டது.

இப்போது மனிதர் ஒருவருக்கொருவர் பயப் படுவதுதான் அதிகம். இதற்கு இதுவரை மனித ஜாதியார் கண்டுபிடித்து அனுசரணையில் வழங்கி வரும் மருந்து உபயோகமில்லை. பயத்தினல் விரோதம் வளர்கிறது. விரோதத்தால் போர் உண்டாகிறது : மனித ஜாதி வீனக அழிகிறது. எல்லோருக்குமே நஷ்டமுண்டாகிறது. பரஸ்பர பயம் நீங்க வேண்டு மால்ை அதற்குப் போர் சரியான மருந்தில்லை. உலகம் தோன்றிய காலமுதல் இன்றுவரை போர்கள் நடந்துதான் வருகின்றன. இது மட்டிலும் மனித ஜாதியிலே ஒருவருக்கொருவர் பயப்படுவது துளி கூடக் குறையவில்லை.

அன்பிருந்தால் பயந் தெளிந்து போகும். ஒரே குடும்பத்திலே ஒருவரையொருவர் கண்டு மரண பயங் கொள்வதில்லை. உலக முழுதும் ஒரே குடும் பத்தைப்போல் வாழக்கூடாதா ? எளியவன் அன்பு தொடங்கி வலியவன் சும்மா இருந்தால் ஒன்றும் நடக்காது. எளியவன் வலிமையை விரும்பி நடக்க