பக்கம்:பாரதித் தமிழ்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பாரதி தமிழ்

வேண்டும். வலியவன் எளியவனிடம் அன்பு செலுத்த வேண்டும்.

யாரிடத்திலும் அன்புடன், யாரிடத்திலும் பயமின்றி நல்லோன் லோகோபகாரஞ் செய் கின்றான்; பராசக்தியின் கையிலே தன்னை ஒரு கருவி யாக ஒப்புவித்துவிட்டு, அவள் சித்தப்படி தொழில் செய்து வருகிருன். உலகத்தை ஆக்குதல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழிலுக்கும் பராசக்தி வெவ்வேறு விதமான கருவிகளை வழங்குகிருள். காற்றும் ஒளியும், வெம்மையும், மண்ணும், நீரும், சித்தமும் உயிரை ஆக்குவதற்குக் கருவிகள்ாகின்றன. காற்றும், ஒளியும், வெம்மையும், மண்ணும், நீரும், சித்தமும், பிற உயிர்களும் உயிரைக் காப்ப தற்குக் கருவிகளாகின்றன.

இவையனைத்தும் காலமும் சேர்ந்து நாசத்திற்குக் கருவிகளாகின்றன. மனித உயிராகிய நான் மற்ற மனித வுயிர்களைக் காக்கும் கருவியாகத் தொழில் செய்வது நன்றா ? அழிக்கும் கருவியாகப் போவது நன்றா ? காப்பது நன்று.

மேலும் கர்ம விதியை மறக்கலாகாது. காக்க விரும்புவோன் காக்கப்படுவான் ; அழிக்க விரும்பு வே ன் அழிக்கப்படுவான். நன்மை விரும்பில்ை நன்மை விளையும்; இல்லாவிட்டால் விளையாது.

ஒருவன் லோகோபகாரத்தை மாத்திரமே விரும்பி நடக்கத் தொடங்கினல் அவனுடைய சொந்த வியாபாரங்களுக்குச் சேதமுண்டாகுமென்று சிலர் நினைக்கிரு.ர்கள். இது பிழை. தனது இன்பத்தை விரும்புவோன் முதலாவது செய்ய வேண்டிய காரியம் லோகோபகாரம்.

‘நன்றி யொருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி’ நமக்குத் திரும்பி வந்தே தீரும். அடுத்த ஜன்மத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/213&oldid=605516" இலிருந்து மீள்விக்கப்பட்டது