பக்கம்:பாரதித் தமிழ்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 பாரதி தமிழ்

--

கவி யெழுதும் அதே கை இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்தே மாதர கீதத்தைத் தமிழில் வரைந்திருக்கிறது. 1906 ஜனவரிக்கடுத்த பிப்ரவரியிலே ‘வந்தே மாதரம்” என்ற சொந்தப் பாடலைச் சுதேச மித்திரனிலேயே தீட்டியும் இருக்கிறது.

பாரதியாரின் தேசிய உணர்ச்சியின் மலர்ச்சிக்கு அவரது காசி வாழ்க்கை பெரிதும் உதவியிருக்க வேண்டும். அவர் இளமையிலே காசிக்குச் செல்ல நேரிட்டதையும் மற்ற விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பிறப்பிலிருந்து தொடர்ச்சியாக அறிந்து கொள்வது நல்லது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிவலப் பேரியிலே சுப்பையார் என்பார் தமது நிலங்களைக் கவனித்துக்கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தார். அவருக்குக் குப்பம்மாள், சின்னசாமி அய்யர், சுந்தர ராஜ அய்யர் என்ற மூன்று மக்கள் உண்டு.

சின்னசாமி அய்யர் தமது அறிவுத் திறமைக்கேற்ப நல்ல உத்தியோகம் வகிக்க ஆசை கொண்டு எட்டையபுரம் சமஸ்தானத்தையடைந்தார். “அவரது கூரிய புத்தியையும் தமிழ்ப் புலமையையும் கண்ட மகாராஜா, அவருக்குத் தமது அரச சபையில் முதல் ஸ்தானம் அளித்துக் கெளரவித்தார். சின்ன சாமி அய்யர் தமது தாய் மாமன் மகளான லக்ஷ்மியை மணந்து இல்லறம் நடத்தினர்........சின்ன சாமி அய்யருக்கு இவ்வளவு நற்குணங்கள் அமைந்தும் முன் கோபம் மட்டும் அசாத்தியம். உறவினரோ மனைவியோ எதிர் நின்று பேசவும் நடுநடுங்குவார்கள்.” (திருமதி செல்லம்மா பாரதி-பாரதியார் சரித்திரம் )

சின்னச்சாமி அய்யருக்கும் லக்ஷ்மிக்கும் மைந்தராக 1882-ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் மூல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/22&oldid=1539746" இலிருந்து மீள்விக்கப்பட்டது