பக்கம்:பாரதித் தமிழ்.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பானியக் கவிதை 221

மழை (மிஸ் ரீஸ் எழுதியதன் மொழிபெயர்ப்பு மாதிரியடிகள்)

ஓ! வெண்மையுடையது; மழை இளையது. கூரை மேலே சொட்டுச் சொட்டென்று விழுகிறது; வீட்டுக் குள் நூறு வஸ்துக்கள் ஒடி வருகின்றன. பூண்டுகளின் மணம். பழமையின் நினைவு. இவை யெல்லாம் புல்லாந்தரையிலே குணந் தெரிகிறது. உடைந்த கண்ணுடித் துண்டு போலே. (I)

சிறிய வெளிக்கதவு புடைக்கிறது பார். அதுவரை செவந்த கொடிப்பூண்டுகள் நேரே ஒடிச் செல்லு கின்றன. (2) ஒ! வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் வந்து நுழை கின்றன. கற்பூரச் செடியின் மணம். பழைய மகிழ்ச்சி, பழைய துன்பம்; இளைய வெண்மழையிலே

கிடைத்தன. (3) மேற்கூறிய பாட்டை எடுத்துக்காட்டிவிட்ட பிறகு நோகுச்சி சொல்லுகிறார்:

“வெண்மையுடையது; மழை இளையது’ என்ற முதலடியில் வியப் பில் லை. அதிஸாமான்யமான வார்த்தை. கடைசி விருத்தம் வயிரம்போலிருக் கிறது. அதை மாத்திரம் தனிக் கவிதையாக வைத்துக்கொண்டு மற்றதையெல்லாம் தள்ளி விடலாம். ஜப்பானியப் புலவன் அப்படியே செய்திருப்பான். சிறிய பாட்டுப்போதும். சொற்கள், சொற்கள், சொற்கள்-வெறும் சொற்களை வளர்த்துக் கொண்டு போய் என்ன பயன்? s

ஜப்பானிலே பதினெட்டாம் நூற்றாண்டில் “பூஸோன் யோஸாஹோ’ என்ற ஜப்பானியக் கவிராயர் ஒரு ஹொக்கு (பதினெழசைப்பாட்டு) பாடியிருக்கிரு.ர். அதன் மொழிப்பெயர்ப்பு: