பக்கம்:பாரதித் தமிழ்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதியார் வாழ்க்கை வரலாறு 23

நட்சத்திரத்தில் எட்டையபுரத்தில் சி. சுப்பிர மணிய பாரதியார் பிறந்தார். அவர் பிறந்த தேதியை 11-12-1882 என்று கிறிஸ்தவ சகாப் தத்தை முழுதும் ஒட்டிக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

பாரதியாருக்கு ஐந்து வயது நிரம்பு முன்னரே அவருடைய தாயார் காலமாய்விட்டார்கள். அதனல் அவரையும் அவருடன் பிறந்த சகோதரி பாகீரதி யையும் அவருடைய ப்ாட்டியாராகிய பாகீரதி யம்மாளே அன்புடன் வளர்த்து வந்தார்.

சின்னசாமி அய்யருக்கு எட்டையபுரம் சமஸ் தானத்திலே செல்வாக்கு அதிகம். அதனல் பாரதி யாருக்கு அங்கே அதிகச் சலுகைகள் இருந்தன. சமஸ்தான வித்வான்களோடு தாராளமாகப் பழகவும் பேசவும் அவருக்கு உரிமையிருந்தது. வித் வான்களைப் போலப் பாடவும் வாய்ப்புண்டாயிற்று. பெரிய இடத்துப் பிள்ளையென்றால் அவனுடைய செயல்களுக்குச் சற்று அளவு கடந்தே புகழ்ச்சி ஏற்படுவது இயல்பு. அதனால் இயற்கையாகவே கவிதைத் திறமை பெற்றிருந்த இவருக்குத் தமது பதினொன்றாம் வயதில் “பாரதி” என்ற பட்டம் கிடைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. புலவர்க ளோடு அளவளாவுதலும், பாரதியென்ற பட்டமும் அவருக்குக் கவிதைத் துறையிலே நல்ல உற்சாக மளித்திருக்க வேண்டும்.

சின்னசாமி அய்யருக்குத் தம் மைந்தன் கணித சாஸ்திரத்திலும் யந்திரக் கலையிலும் வல்லவனுக வேண்டும் என்று ஆசை. பாரதியாருக்கு இயல்பான திறமை எதிலிருக்கிறதோ அந்தத் துறையிலே அவருக்கு எட்டையபுர சமஸ்தான வாழ்வுதான் பெரிதும் உதவியாக இருந்தது என்று சொல்ல வேண்டும்,