பக்கம்:பாரதித் தமிழ்.pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சங்கீத விஷயம் 233

தமிழ் பிழையாகவும் பொருள் ரஸ்மில்லாமலும் பாட்டுக்கள் இருந்தால் அவற்றை மின்றிலே கொண்டு வருதல் நியாயமில்லை.

இருந்தாலும் மத்தளக்காரனுக்குப் பாட்டுக் காரன் பயந்து கட்டுப்பட்டு நடக்கும் விபரீதம் சில இடங்களிலே காணப்படுவதைக் கண்டனை செய்து பூரீநிவாஸய்யங்கார் சொல்லும் வார்த்தை ஒப்புக் கொள்ளத்தக்கது.

ஏனென்றால் பாட்டுக்காரன் தனது பாட்டுக் களுக்குத் தவருமல் தாளம் போட்டு வரவேண்டும். இவ்வளவு தாள ஞானம் இருந்தால் பாடகனுக்குப் போதும். அதிகமிருந்தால் மிச்சம். இந்த விஷயந் தெரியாமல், மத்தளக்காரனுக்குப் பட்டுக்காரன் பயப்படுவ்து மிகவும் வேடிக்கை.

பூரீமான் ரீநிவாசய்யங்கார் ராகப் பழக்கம், வர்ணங்கள், கீர்த்தனங்கள் முதலிய விஷயங்களைப் பற்றி எழுதியிருப்பதெல்லாம் (பெரும்பகுதி)கேட்ட வுடன் நியாயமென்று கொள்ளத்தக்கது. கீர்த் தனங்கள் பழகுவது மாத்திரம் அவரவரிஷ்டப்படி போகவேண்டும். எது எப்படியாயினும் யாராவ தொரு வித்வான் இந்தத் தமிழ்நாட்டுக்குப் புதிய கீர்த்தனங்கள் ஏற்படுத்தும் வழிகாட்டிக் கொடுத் தால், ஆயிரம் பேர் அதைப் பின்பற்றி மேன்மை பெறுவார்கள்.

குறிப்பு:- இதே தலைப்புடன் பாரதி ஆால்கள் மூன்றாம் தொகுதியில் மற்றாெரு கட்டுரை இருக்கிறது. அக்கட்டுரை பாட்டு என்ற தலைப்புடன் சுதேசமித்திரனில் வெளி யானதை முன்பே எடுத்துக் காட்டியிருக்கிருேம். இக்கட்டுரை அத்தொகுதியில் சேரவில்லை.