பக்கம்:பாரதித் தமிழ்.pdf/233

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காலம்

காளிதாஸன்

26 டிசம்பர் 1916 நள மார்கழி 22

‘ஜாதி என்ற சொல் இரண்டர்த்தமுடையது. முதலாவது, ஒரு தேசத்தார் தமக்குள் ஏற்படுத்தி வைத்துக் கொள்ளும் பிரிவு. வேளாள ஜாதி, பிராமண ஜாதி, கைக்கோள ஜாதி என்பதுபோல். இரண்டாவது, தேசப் பிரிவுகளைத் தழுவிய வேற்றுமை. ஜப்பானிய ஜாதி, சீன ஜாதி, பார்ஸி ஜாதி, பாரத ஜாதி, ஆங்கிலேய ஜாதி, ஜர்மானிய ஜாதி, ருமானிய ஜாதி என்பதுபோல். இவ்விரண்டும் அதிக அனுகூலம் இல்லையென்பது பூரீமான் ரவீந்திர நாத டாகுருடைய ககதி.

அமெரிக்காவிலே பிறந்தவன் தன்னை அமெரிக்க ஜாதியென்பதும், இங்கிலீஷ் ஜாதி இல்லை யென்றும் நினைத்துக் கொள்ளுகிருன். இங்கிலாந்திலுள்ள ஆங்கிலேயனுக்கும் குடியரசுத் தலைவன் வில் ஸனுக்கும் நடை, உடை, ஆசாரம், மதம் பாஷை எதிலும் வேற்றுமை கிடையாது. ஆனல் தேசத்தை யொட்டி வேறு ஜாதி, நேஷன். இந்த தேச ஜாதிப் பிரிவு மேற்குப் பக்கத்தாரால் ஒரு தெய்வம் போலே ஆதரிக்கப்படுகிறது. அங்கு, யுத் தங்களுக்கு இக்கொள்கை ஒரு முக்கிய காரணம்.