பக்கம்:பாரதித் தமிழ்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பாரதி தமிழ்

அநாவசியமான ஜாதி விரோதங்களும், (அன்புக் குறைவுகளும்) அவமதிப்புக்களும் வளரவிடலாமா? ஆவற்றை அழித்து உடனே அன்பையும், உடன் பிறப்பையும் நிலைநாட்டுவது நம்முடைய கடமை யன்றாே?

எது எப்படியானலும், இந்த தினத்தில் இந்த கூ:ணத்தில் நாமெல்லோரும் (பறையர், பார்ப்பார், எல்லாரும்) ராஜாங்க விஷயத்தில் ஒரே ஜாதி. இப்போது எங்களுக்கு அதிகாரிகள் தயவு செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால்;

எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதி நிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு செலவு உட்பட எல்லா விவகாரங்களும் மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேய சாம்ராஜ்யத்தை விட்டு விலகவேண்டு மென்ற யோசனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வ்தாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் சேர்ந்து விண்ணப்பம் செய்கிருேம். விடுதலை விண்ணப்பத் துக்கு நல்ல உத்தரவு கொடுக்கவேணும்.

குறிப்பு:-இக்கட்டுரை பாரதியார் நூல்கள் மூன்றாம் தொகுதியில் சமூகம் என்னும் பகுதியில் தேசியக் கல்வி என்ற கட்டுரையின் ஒருபகுதியாகத் தவருகச் சேர்க்கப்பட்டுள்ளது. தேசீயக் கல்விக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். இது தனிக் கட்டுரையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முழுவதையும் இங்கு வெளியிடுகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/235&oldid=605549" இலிருந்து மீள்விக்கப்பட்டது