பக்கம்:பாரதித் தமிழ்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24. பாரதி தமிழ்

சின்னசாமி அய்யர் தமது விருப்பத்திற்கேற்பப் பாரதியாரைப் புத்தகமும் கையுமாகக் காலங் கழிக்க_வேண்டுமென்று விரும்பினர், தந்தை யிடத்திலே மகனுக்குப் பயமும் அதிகம். அதனுல் துள்ளித் திரிய விரும்பும் இளமைக் காலத்திலே பாரதியார் புத்தகத்தைத் தவிர வேறு தோழமை யின்றி வருந்தினராம். இதை அவர் ஸ்வசசிதை என்ற பாடலில்ே நன்றாக எடுத்துக் கூறியிருக்கிரு.ர்.

ஆண்டோர் பத்தினி லாடியு மோடியும் ஆறு குட்டையி னிச்சினும் பேச்சினும் ஈண்டு பன்மர்த் தேறி யிறங்கியும் என்னே டொத்த சிறிய ரிருப்பரால் வேண்டு தந்தை.விதிப்பினுக் கஞ்சியான் ‘வீதி யாட்ட்ங்க் ளேதிலும் கூடிடேன்

துண்டு நூற்கணத் தோடு தனியணுய்த் தோழம்ை பிறி தின்றி வருந்தினேன்

என்று அவர் தமது இளமை ஏக்கத்தை விவரிக்கிறார்,

பாரதியாரின் தாயார் லக்ஷ்மியம்மாள் இறந்த இரண்டாண்டுகளின் பின் சின்னசாமி அய்யர் வள்ளி யம்மாள் என்ற பெண்மணியை இரண்டாந் தாரமாக மணம் செய்து கொண்டார். அந்த அம்மாள் மூலமாக அவருக்கு ஆண் குழந்தை யொன்றும், பெண் குழந்தை யொன்றும் பிறந்தன.

பாரதியாருக்கு ஆங்கில உயர்தரக் கல்வி அளிக்க வேண்டுமென்றும், சீமைக்கு அவரை அனுப்ப வேண்டுமென்றும் சின்னசாமி அய்யருக்கு ஆசை யிருந்தது. முதலிலே திருநெல்வேலிக்கு அனுப்பி ஹிந்து கலாசாலையில் படிக்க வைத்தார். திருநெல் வேலிக்குச் செல்லும்போது அவருக்கு வயது என்ன என்பது தெரியவில்லை. 1887 முதல் 1890 வரை அங்கு படித்ததாக யோகி சுத்தானந்த பாரதியார் தமது பாரதி விளக்கம் என்ற நூலில் கூறுகிரு.ர். அவ்