பக்கம்:பாரதித் தமிழ்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிப் பாங்கு 241

தில்ை உள்நாட்டு மந்திரி மேற்படி கூட்டத்தை அதிகாரிகள் தடுக்காதபடி நியமித்திருக்கலாமென்று மேற்படிகாரியதரிசிதமது கடிதத்தில் சொல்லுகிரு.ர். அதை நாம் நம்பவில்லை. ப்ரிடிஷ் மந்திரிகள் இயற் கையிலேயே குடியுரிமைகளைத் தடுக்க மனதில்லா தவர்கள். இது நிற்க. ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்று திருவள்ளுவர் சொல்லு கிரு.ர்.

ஆதலால், டிெ குடியுரிமைக் காப்புச் சபையார் தேசப் பொதுமைக்கு விபத்து நேர்ந்திருப்பதைத் தடுத்து வெற்றி பெறுவதாகிய ஒரே நோக்கத் துடன் எல்லாக் காரியங்களும் செய்யாதபடி சில்ல ரைச் சட்டங்களின் மெதுவான ப்ரயோகங்களைக் கண்டனம் ப ண் ணி க் .ெ கா ண் டி ரு ப் ப து லெளகிகமில்லை யென்றாலும், இந்த விஷயத்தில் அவர்களுடைய செய்கை விபரீதமென்பது மெய்யே யானுலும், அவர்களுடைய வார்த்தையில் எத்தனை குன்றுமணி உண்மை சேர்ந்திருக்கிற தென்பதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

யுத்தம் நடப்பது காரணமாக ஜனங்களுடைய ஸாதாரண உரிமைகளை அதிகாரிகள் புறக்கணிப்பது சில ஸமயங்களில் அவசியமாக ஏற்பட்ட போதிலும், ஒரேயடியாக ஜன தர்மங்களைப் படுகுழியிலே கொண்டு அமிழ்த்தி விடும்படி ஜனத் தலைவர் பார்த்துக் கொண்டிருக்கலாமா? யுத்த காலத்தில் ஜன உரிமை எவ்வளவு தூரம் வளைய இடங் கொடுக் கலாம்? அதை எல்லைப் படுத்த வேண்டிய காரியம் இப்போது ஐரோப்பியப் பண்டிதர்களே வந்து சூழ்ந் திருக்கிறது.

Loft’s த.-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/240&oldid=605558" இலிருந்து மீள்விக்கப்பட்டது