பக்கம்:பாரதித் தமிழ்.pdf/244

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொழில் 245

இணங்கியதேயாகும். தொழிலின்றியிருப்பவனுக்கு விடுதலையில்லை, ஞானமில்லை, பக்தியில்லை. அவ னுக்குச் சோறு கிடையாது; தண்டச் சோறு தின்று தொழில் செய்யாதிருப்பவன் கொழுத்து நோய் கொண்டு சாவான். இந்த விஷயங்கள் பகவத்கீதை யில் மிகத் தெளிவாகச் சொல்லப்படுகின்றன.

கார்லைல் (7) என்ற ஆங்கிலேய ஆசிரியர் தொழி வின்றி யிருப்பவனைச் சந்தேகம் முதலிய பிசாசுகள் வந்து தாக்குமென்று சொல்லிய வார்த்தை பொது அனுபவத்திலே காணத்தக்கது. சந்தேகம், பயம் முதலிய பிசாசுகள் வந்து தாக்காமலிருக்கும் பொருட்டாகவும், அங்ஙனம் தாக்கும் போது அவற்றை மடிக்கும் பொருட்டாகவும் தொழி லென்ற மருந்தைக் கடவுள் கொடுத்திருக்கிரு.ர்.

பூஜை, கல்வி, போதனை முதலியனவும் சரீர உழைப்புப் போலவே கவலையை நீக்கி உடம்பைப் பேணும். உண்மையாகச் செய்யப்படும் பூஜையும், உபதேசமும் எல்லாத் தொழில்களைக் காட்டிலும் சிறந்தன. பொய்ப் பூஜையும், காசைப் பெரிதாக நினைத்துச் செய்யும் ஞானோபதேசமும் மிகவும் இழிந்த தொழில்களாகும். பல இடங்களில் வியா பர்ரிக்குள்ள மதிப்புப் பூசாரிக்கும் குருக்களுக்கும் இல்லாதிருக்கக் காண்கிருேம். இவர்களுக்கு மதிப் புக் குறைவுண்டாகும் காரணம் உண்மைக் குறைவு தவிர வேருென்றுமில்லை. அறிவை நல்ல வழிகளில் உழைப்பவனுடைய உடம்பு முயற்சியில்லாமல் சோம்பிப் படுத்திருக்க நியாயமில்லை. சோம்பேறி யின் விருப்பங்கள் கவலைகளாக மாறுகின்றன. கையில்ை உழைக்காமல் மனத்தால் விரும்புவோன் தன்னைத்தானே தின்று கொள்ளுகிருன். சோம் பேறியின் மனத்தைக் கவலைகள் சூறையாடுவது போல், அவனுடம்பை வியாதிகள் குறையாடு