பக்கம்:பாரதித் தமிழ்.pdf/245

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


246 பாரதி தமிழ்

கின்றன. முயற்சியினலே செல்வம் வருமென்றும் முயற்சி யில்லாவிட்டால் வறுமை வருமென்றும் திருவள்ளுவர் சொல்லுகிரு.ர். முயற்சி யில்லாத வருக்கு நோய் வரும், பந்தங்கள் வரும்; அவர்கள் மோந்தாஞ் ஆசிரியர் (8) சொல்வது போல் இவ்வுல கத்திலேயே நரகவாதனைப்படுவார்கள், ஆதலால் ஹிந்துக்களாகிய நாம் முயற்சியைக் கைவிடாமல் நடத்தவேண்டும். முயற்சியுண்டானல் உடம்பிலே வலிமையுண்டு. உள்ளத்திலே மகிழ்ச்சியுண்டு, கல்வியுண்டு, செல்வமுண்டு. நீண்ட வயதும் புகழும் இன்பங்களுமுண்டு. முயற்சி யிருந்தால் பயமில்லை. முயற்சி யுண்டானல் வெற்றியுண்டு. முயற்சி உடை யவனுக்கு விடுதலை கைகூடும்.