பக்கம்:பாரதித் தமிழ்.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொழுது போக்கு 249

பட்டிருந்தால் இப்போது நீர் அதிகமாக ஸ்ந்தோஷ மடைவீர்.

காளி:-சரிதான். ஆனல் நீர் போன மாஸம் என்னைப் பார்த்தபோது ஜார் சக்ரவர்த்தியையும் அவருடைய மந்திரிகளையும் புகழ்ந்து பேசினதாக ஞாபகமிருக்கிறது.

ஸந்:-ஒயாமல், ஹிந்துக்களைப் புகழ்ந்து கொண் டிருந்தால் நீர் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண் டிருப்பீர். போன மாஸம் நான் ஜார் சக்ரவர்த்தி யைப் புகழ்ந்த காரணம் வேறு. ராஜ்யத்தில் எத்தனை கஷ்டங்களிருந்தபோதிலும், ரஸ்புதீன் முதலிய துர்மந்திரிகளின் வார்த்தையைக் கேளாமல், அவர் நம்முடைய நேச ராஜ்யங்களின் விஷயத்தில் உண்மை செலுத்தி வந்ததன் பொருட்டாக அவரைப் புகழ்ந்தேன். இப்போது..........

காளி:-சரி, சரி; நிறுத்தும். வேறேதேனும் கதை சொல்லும் கேட்கிறேன்.

ஸந்:-ஏழெட்டு நாளைக்கு முன்பு நம்முருக் கடுத்த பிள்ளைப்பட்டி யென்ற கிராமத்தில் ஒருவன் கோபத்தால் தன் மனைவி வயிற்றில் மிதித்தானும். அவள் செத்துப் போய் விட்டாளாம். அந்த விஷயம் இப்போது போலீஸ் விசாரணையிலிருக்கிறதாம். நீர் கேள்விப்பட்டீரா ?

காளி:-ஆம்.

ஸ்ந்:-அதிலிருந்து, அந்தக் கிராமத்து ஜனங்க ளெல்லாம் ஆலமரத் தடியில் ஒரு கூட்டம் கூடி இனி மேல் யாரும் பெண்டாட்டியை அடிக்கக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டார்களாம். அது கிடக்கட்டும். காளிதாஸ்ரே, உம்மிடம் நான் ஒரு முக்கியமான விஷயம் கலந்து பேசவில்லையே?