பக்கம்:பாரதித் தமிழ்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் வாழ்க்கை வரலாறு 25.

வாருனல் அவர் தமது ஐந்தாம் வயதில் அங்கு படிக்கச் சேர்ந்தாக ஆகிறது. இது சரியென்று தோன்றவில்லை. ஐந்தாம் பாரம் வரை அங்கு படித்ததாக ஏற்படுவதால் அவர் மணமாகும் வரை யிலோ அல்லது அதன் பின்னருங் கூடவோ படித் திருக்க வேண்டும்.

பாரதியாருக்கு அந்தப் படிப்பும் பிடிக்கவில்லை.

செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது திதெ னக்குப் பல்லாயிரஞ் :ே

நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்

என்று அவரே தமது திருநெல்வேலிப் படிப்பைப் பற்றிக் கூறுகிரு.ர். ஐந்தாம் பாரம் வரையில்தான் பாரதியார் அங்கு படித்தார்.

இதன் மத்தியிலே பாரதியாருக்குக் கல்யாண ஏற்பாடாகிவிட்டது. 1897-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழ்க் கடயத்தில் வாழ்ந்த செல்லப்பா அய்யரின் புதல்வி செல்லம்ாமளுக்கும் இவருக்கும் திருமணம் நடை பெற்றது.

மணமாகும்போது பாரதியாருக்கு வ ய து பதினன்கு என்று அவர் மனைவியார் எழுதுகிறார்கள்: பதினைந்து என்று மற்ற நூல்கள் கூறுகின்றன. ஆனல் தமக்கு அப்பொழுது வயது 12 என்று பாரதியார் தமது ஸ்வசரிதையில் இரண்டு முறை குறிப்பிடுகிரு.ர். ஒரு வேளை அது அவர் ஞாபகப் பிசகாக எழுதியதாக இருக்கலாம். மணமாகும்போது திருமதி செல்லம் மாளுக்கு வயது ஏழு.

இந்தச் சந்தர்ப்பத்திலே ஸ்வசரிதை கூறும் மற்றாெரு விஷயந்தான் நன்றாக விளங்கவில்லை.