பக்கம்:பாரதித் தமிழ்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 tamy தி தமிழ்

செய்யவேண்டும். நீர் உபந் யாசி; நான்தான் சபைக் கூட்டம். நடத்தும்” என்றேன்.

அதற்கு சேஷய்யங்கார் சொல்கிறார்:

“நாம் உபந்யாஸ் கர்த்தா, நீர் அக்ராஸளுதிபதி, அந்தச் செம்படவன் தான் சபை’ என்றார்.

அப்போது, சற்று தூரத்திலே யிருந்த அந்தச் செம்படவன் சொல்லுகிருன்:

“சாமிமாரே, நீங்கள் வந்தாலும் வந்தீர்கள்; எனக்கு மூன்று மீன் கூட முழு மீளுகக் கிடைக்க வில்லை.” சேஷய்யங்கார் இதைக் கேட்டவுடனே கால் ரூபாயை அவன் கையிலே கொண்டு போய்க் கொடுத்து அவனை யழைத்து வந்து நாங்களிருந்த நிழலிலே உட்காரும்படி செய்தார். இவருடைய படாடோபத்தைக் கண்டு ஆரம்பத்திலே அவன் கொஞ்சம் பயந்தான். பிறகு அவர் சொன்னபடி கேட்டால் காசு கிடைக்குமென்று தெரிந்து கொண்டு, அவன் எங்கள் பக்கத்தில் வந்து உட் கார்ந்தான்.

சேஷய்யங்கார் உபந்யாஸிக்கலாஞர்:

‘நாலு ஜாதி தான் உண்டு. பிரம, rத்திரிய, வைசிய, குத்ரர். படித்தவன் பிராமணன்; வீரன் கூத்திரியன்; தந்திரசாலி வைசியன்: தொழிலாளி சூத்திரன். இது எந்த தேசத்திலும் உண்டு. எந்தக் காலத்திலும் உண்டு. இதை மாற்றவே முடியாது.’

செம்படவன்:-"மெய்தான் சாமி, மெய்தான் சாமி என்றான்.

சேஷய்யங்கார்:-"இந்தச் செம்படவன் மகன் படித்து சாஸ்திரத் தேர்ச்சி யடைந்து பிரமஞானி யாய் விட்டால் அவனுக்கு என் பெண்ணை விவாகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/253&oldid=605577" இலிருந்து மீள்விக்கப்பட்டது