பக்கம்:பாரதித் தமிழ்.pdf/256

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடற் பாலத்தில் வர்ணசிரம சபை 257

செய்து கொண்டான். பிராம்மண ஜாதி எங்களுக் குத் தகப்பன் முறை. இக்காலத்தில் பலர் ‘ எங்க களுக்கு உபகாரம் பண்ண வருகிரு.ர்கள். எல்லா மனிதரும் சரிசமானமென்றும் மனிதருக்குள் எவ் விதமான பேதமும் கிடையாதென்றும் பலர் சொல்லுகிரு.ர்கள். எல்லாம் வாய்ப் பேச்சாகத் தானிருக்கிறது. நடத்தையில் ஒன்றையும் காண வில்லை. ஹிந்து மதத்தில் எங்களுடைய நிலைமை தாழ்ந்திருக்கிற தென்றும், கிறிஸ்து மதத்தில் சேர்ந் தால் எங்களுடைய நிலைமை மேன்மைப்படுமென் றும் சொல்லிக் கிறிஸ்தவப் பாதிரிகள் எங்களிலே சிலரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்தார்கள். அதில் யாதொரு பயனையும் காணவில்லை. நூற்றிலொரு வனுக்குப் பத்துப் பதினேந்து ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கிறது. மற்றவர்களெல்லாரும் துரைமாரிடத்தில் சமையல் வேலை பண்ணுதல், பயிரிடுதல், குப்பை வாருதல் முதலிய பழைய தொழில்களைத்தான் செயது வருகிரு.ர்கள். எனக்கு முன்னேருடைய மதமே பெரிது. கிறிஸ்தவர்களு டன் எங்களுக்குக் கொடுக்கல், வாங்கல், சம்பந்தம், சாப்பாடு ஒன்றுமே கிடையாது. என்ன கஷ்ட மிருந்தாலும் நாங்கள் ஹிந்து மதத்தை விடமாட் டோம். உங்களைப்போலே எல்லாப் பார்ப்பாரும் எங்களிடம் அன்பு பாராட்டினல், பிறகு எங்களுக்கு யாதொரு குறையுமில்லை. தொழில் ஏதாயிருந்தா லும் குற்றமில்லை. ஒரே தேசத்தில் பிறந்து, ஒரே மதத்தைச் சேர்ந்து, ஒரே கூட்டமாக இருக் கும் ஹிந்துக்கள் ஒருவருக்கொருவர் அன்போ டிருக்க வேண்டாமா? எங்கள் ஜாதிக்காரருக்குச் சோறும் துணியும் நேரே கிடைத்து வருகிறதா என் பதைக்கூட மற்ற ஹிந்துக்கள் கவனியாமலிருப்பது நியாயமா? எந்தத் தொழில் செய்து பிழைத்தாலும் தெய்வ பத்தி இருந்தால் இஹத்தில் மேன்மையும்

பா. த.-17