பக்கம்:பாரதித் தமிழ்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற் பாலத்தில் வர்ணுசிரம சபை 259

“இவவளவு படிப்பு நீ எங்கே படித்தாய்?” என்று நான் அந்தக் கிழச் சாம்பானிடம் கேட் டேன். அதற்குக் கிழச்சாம்பான் சொல்கிருன்:

“என்னுடைய பிதாவுக்கு வாத்தியார் வேலை. அவர் தமிழிலே மேலான படிப்புள்ளவர். நானும் திருக்குறள் முதலிய சாஸ்த்திரங்கள் படித்திருக் கிறேன். படிப்பிலே என்ன பயனுண்டு, சாமி? பெரியோர்களுடைய சேர்க்கையால் தெய்வபக்தி ஏற்பட்டது. அதையே ஊன்றுகோலாகக் கொண்டு பிழைத்து வருகிறேன்’ என்றான்.

அப்போது சேஷய்யங்கார் அவனை நோக்கி;

“இந்த தேசத்து ஜாதிக்கட்டு அநியாயமென்று உனக்குத் தோன்றவில்லையா? தெருவுக்குள் உங்க ளவர் வரக்கூடாதென்று மற்ற ஜாதிக்காரர் ஏற் பாடு செய்திருப்பது பற்றி உனக்கு வருத்த முண்டாகவில்லையா? உன் மனம் அதை நினைத்து நினைத்துக் கொதிக்கவில்லையா?” என்று கேட்டார்.

அதற்குக் கிழச் சாம்பான் :

‘இல்லை, சாt; என் மனம் அதிலே கொதிப் படையவில்லை. மனிதருடைய இஷ்டப்படி இந்த உலகம் நடப்பதாக மூடர் நினைக்கிறார்கள். நீங்கள் சொல்லிய அநியாயம் என் கண்ணுக்குத் தெரியத் தான் செய்கிறது. அதிலே வருத்தமில்லை. விதிப் படி எல்லாம் நடக்கிறது. அநியாயம் உலகம் முழுதை யும் சூழ்ந்திருக்கிறது. சீக்கிரம் அழிந்து போய் விடும். உலகத்தில் அநியாயம் குறைவுபடும்போது எங்கள் ஜாதிக்கும் நியாயம் கிடைக்கும். அதைப் பற்றி என்க்குக் கொஞ்சமேனும் பயமில்லை. எந்த அநியாயமும் உலகத்தில் நீடித்து நிற்காது. ராவ ளுதிகள் இப்போதிருக்கிறார்களா? அவர்கள் காலத் தில் என்ன அநியாயம் நடந்தது! பிராமணர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/258&oldid=605584" இலிருந்து மீள்விக்கப்பட்டது