பக்கம்:பாரதித் தமிழ்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பாரதி தமிழ்

களுடைய யாகத்தை அழிக்கவில்லையா? மனிதர் களைப் பிடித்துப் பிடித்துத் தின்னவில்லையா?........

கேட்டீர்களா? சாமிமாரே? என் தகப்பனர் இறந்துபோய் இப்போது நாற்பது வருஷமாகிறது. அவர் தொண்ணுாற்றிரண்டு வயதிருந்தார். சாகும் வரையில் பேச்சு வார்த்தை தள்ளாடவில்லை. உறுதி யாகவே யிருந்தார். அவர் செத்துப் போவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னே ஒரு நாள் பாதி ராத்திரியில் என்னை எழுப்பிப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பல செய்திகள் சொன்னர். அதில் ஒரு வார்த்தை இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது. கேட்டீர்களா, சாமிமாரே? என் தகப்ப ஞர் சொன்னுர்: “அடே, லக்ஷ்மணு, நான் எப்போது செத்துப் போவேனே தெரியாது. ஆனல் என்னு டைய குரு எனக்குச் சொல்லி வைத்த ஆச்சரிய மொன்றை உனக்குச் சொல்லிவிட்டுப் போகிறேன். கலியுகம் ஐயாயிரம் வருஷத்துக்குப் பிறகு ஒரு புது யுகம் பிறக்கும். அதுதான் கலியுகத்துக்குள்ளே கிருதயுகம். அப்போது இந்த உலகமே மாறும். அநியாயங்களெல்லாம் நொறுங்கித் தவிடுபொடி யாகி விடும். நாலு குலம் மறுபடியேற்படும். அந்த நாலு குலத்தாரும் வெவ்வேறு தொழில் செய்து பிழைத்தாலும், ஒருவர்க்கொருவர் அநியா யம் செய்யமாட்டார்கள். துரோகம் செய்யமாட்டார் கள். அன்பே தெய்வமென்று தெரிந்து கொள்ளு வார்கள். அன்பிருந்தால் குழந்தையும் தாயும் ஸ்மா னம்; ஏழையும் செல்வரும் ஸ்மானம்; படித்தவனும் படியாதவனும் ஸ்மானம்: அன்பிருந்தால் மனிதனும் தெய்வமும் ஸ்மானம்; அன்பு பூமியிலே மேலோங்கி நிற்கும். அப்போது மாதம் மூன்று மழை நேரே பெய்யும். பஞ்சம் என்ற வார்த்தையே இராது. தெற்கு தேசத்தில் பிராமண குலத்தில் கபில முனி வரும் அகப் பேய்ச் சித்தரும் திரும்பி அவதாரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/259&oldid=605586" இலிருந்து மீள்விக்கப்பட்டது