பக்கம்:பாரதித் தமிழ்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 பாரதி தமிழ்

பத்து வயதினிலே தோழமையின்றிப் பாரதி

யார் வருந்தியதைப் பற்றி முன்பே குறித்தேன். அவ்வாறு துன்பம் உழன்ற காலத்தில் ஒன்பது வயதுள்ள ஒரு அழகிய கன்னியைக் கண்டு காதலுற்ற தாக அவ்ர் ஸ்வரிதையில் கூறுகிரு.ர்.

ஒன்ப தாயபி ராயத்த ளென்விழிக்

கோது காதைச் சகுந்தலை யொத்தனள். பிள்ளைக் காதலர்கள் இருவரும் கானகத்தி லிரண்டு பறவைகள் காதலுற்றது போல’ அன்பு கொண் டிருந்தனர். அவர்கள் காதலிலே உடலைப் பற்றிய எண்ணமே இல்லை.

ஊன கத்த துவட்டுறு மன்புதா

னென்று மின்றி யுயிர்களி லொன்றியே

தேன. கத்த மணிமொழி யாளொடு

தெய்வ நாட்கள் சிலகழித் தேனரோ என்று இவ்வாறு பாரதியார் பாடுகிரு.ர்.

இந்த நிலையிலே பாரதியாருக்குத் திருமணம் நடந்தது.

ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில் ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன் : ஈங்கொர் கன்னியைப் பன்னிரண்டாண்டனுள் எந்தை வந்து மணம்புரி வித்தனன் என்றும்,

கற்றுங் கேட்டு மறிவு முதிரு முன் காதலொன்று கடமையொன் ருயின என்றும் பாரதியார் கூறுவதிலிருந்து அவருடைய பிள்ளைப் பருவத்திலே ஏற்பட்ட ஒராழ்ந்த அன் புணர்ச்சியை நாம் அறிகிருேம்.

தக்க பருவமெய்தியவரிடையே தோன்றுவதும், சாதாரணமாகக் காதலென்ற சொல்லால் குறிக்கப்