பக்கம்:பாரதித் தமிழ்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடற் பாலத்தில் வர்ணுசிரம சபை 26I

செய்வார்கள். அவர்கள் ஊரூராகப் போய் ஜனங் களுக்கு தர்மத்தைச் சொல்லி ஜாதி வழக்கை யெல் லாம் தீர்த்து வைப்பார்கள். அப்போது தர்மம் நிலை பெற்று நிற்கும். நீ இருக்கும்போதே இந்தப் புதிய யுகம் ஆரம்பமாய்விடும். உன் கண்ணுலே பார்ப் பாய்’ என்று என் தகப்பனுர் சொன்னர்.”

இங்ஙனம் அந்தக் கிழச் சாம்பான் சொல்வி முடித்தான். பிறகு நேரமாய் விட்டபடியால் சபை யைக் கலைத்து விடலாமென்று நான் சொன்னேன். சேஷய்யங்கார் அந்தக் கிழச் சாம்பானைப் பல வார்த்தைகள் சொல்லிப் புகழ்ந்தார். பிறகு அவ் விருவரும் தனியாகப் போய் ஏதோ பேசிக்கொண் டிருந்தார்கள். அப்பால் சேஷய்யங்கார் செம்பட வன் கையில் இன்னும் கால் ரூபாய் கொடுத்து, “என்னல் உனக்கு நஷ்டமேற்பட்டதற்குச் சரி யாய்ப் போய்விட்டது” என்றார். கிழச் சாம்பானும் விடை பெற்றுக்கொண்டு போனன். நானும் சேஷய் யங்காரும் திரும்பி வீட்டுக்கு வருகையிலே அவர்எ ன் னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. ஏதோ தன் மனதுக்குள் தீர்க்கமான யோசனை செய்து கொண்டு வந்தார். இடையிடையே அவர் முணு முணுவென்று சொல்லிய வார்த்தைகளில் இரண் டொன்று என் காதில் பட்டது.

“ஹிந்து தேசமே! உன்னுடைய மஹிமையை நான் என்னென்று புகழ்வேன்?’ என்றார்.

குறிப்பு :-இக் கட்டுரையின் இரண்டாம் பாகம் 17-4-1917-ல் வெளியானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/260&oldid=605588" இலிருந்து மீள்விக்கப்பட்டது