பக்கம்:பாரதித் தமிழ்.pdf/264

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விளக்கு 265

பாஷைகள் எழுதவும் படிக்கவும் செய்விப்பதே ஆதாரமாகும். அதை முதலாவது வேரூன்றச் செய்ய வேண்டும். ஹிந்துப் பிள்ளைகளே, உங்களுக்குக் கோடி புண்ணியமுண்டு. கூட்டங் கூடி நாட்டைச் சுற்றுங்கள். தமிழ் வளர்ந்தால் தர்மம் வளரும். பிராமணர் முதலாகப் பள்ளர் வரையிலும், எல்லா ஜாதிகளிலும், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகுதிப்பட்டால், அநாவசியப் பிரிவுகள் நிச்சய மாகக் குறைவு படும். நமக்குள் கைச்சண்டை மூட்டி விடுவோரையும், பாஷைச் சண்டை, சாதிச் சண்டை மூட்டிவிடுவோரையும் கண்டால் ஜனங்கள் கை கொட்டிச் சிரிப்பார்கள். ஹிந்துக்களாகிய நாமெல் லாரும் ஒரே கூட்டம், ஒரே மதம், ஒரே ஜாதி, ஒரே குலம், ஒரே குடும்பம், ஒரே உயிர் என்பதை உலகத் தார் தெரிந்து கொள்ளுவார்கள். அதனல் பூமண்ட லத்துக்கு rேமமுண்டாகும்.