பக்கம்:பாரதித் தமிழ்.pdf/266

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை 267

கொடைகள் காலம், தேசம், இவற்றுக்குத் தக்க படி அந்தந்த விதமாக மாறி நிற்கும். இன்னின்ன காலத்தில் இன்னின்னருக்கு இன்னின்ன பொருள் கொடுக்க வேண்டுமென்பது தர்மிஷ்டனுக்கு ஸ்வ பாவத்திலேயே தெரியும். சேர்க்கப்படுவது செல்வம். மனிதனுக்கு இன்பம் தரும் பண்டங்களையும் அவற் றைக் கொள்வதற்கு நல்ல கருவியாகிய பொன்னை யும் சேகரித்து வைக்க வேண்டும். இடைவிடாமல் சேர்க்க வேண்டும். கை பற்றின படியாகவே இருக்க வேண்டும். ஆனல் தீயக்ாரியம் செய்து, கெட்ட தொழில் செய்து சேர்த்த செல்வம் நிற்காது. செல் வம் சேர்த்த பிறகு அதன் உரத்தால் பிறர்க்குத் தீங்கு செய்வாரும் விரைவிலே செடுவார். அல்லற் பட்டாற்றாது அழுதகண்ணி ரன்றே செல்வத்தைக் தேய்க்கும் படை” என்று திருவள்ளுவரும் சொன் ஞர். துன்பப்பட்டார் அது பொறுக்காமல் அழும் கண்ணிரானது, அந்தத் துன்ப முண்டாக்கியவனு டைய ஐசுவரியத்தை அறுத்தெரியும் ஆயுதமாகும். செல்வம் இனிது. அது முயற்சியினல் சேர்க்கப்படு வது. பயனுள்ள தொழிலை மேன்மேலும் ஊக்கத்து டனும் அறிவுடனும் செய்வதால் பொருள் பெருகும். தீயது செய்தாலன்றிப் பொருள் தேட முடியா தென்று மூடர் நினைக்கிறார்கள். தீயது செய்யாதபடி சேகரிப்பதே பொருளென்றும், மற்றையது பல துன்பமுண்டாக்கி விரைவிலே அருந்து போவதோர் மருளென்றும் ஒளவை சொல்லுகிருள்.

பெண்ணும், ஆணும் அன்பு கொண்டு வாழ் வதே இன்பங்களிலெல்லாம் சிறந்த இன்பம். உண வும், ஸ்நானமும், பூவும், சந்தனமும் முதலிய இன் பங்களெல்லாவற்றைக் காட்டிலும் காதலின்பமே சிறந்தது. காதலுடைய இருவர் கருத்திலே ஒன்று பட்டவராய் ஆதரவு கொள்ளும் நிலையை மனிதர்