பக்கம்:பாரதித் தமிழ்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 பாரதி தமிழ்

கட்டுப்பாடுகளாலும், பணச் செருக்காலும், அநீதி யாலும் பெற விரும்புகிறார்கள். ஆண் பெண் உற வில்ை வரும் துன்பந்தான் மனிதருக்கு இவ்வுலகத் தில் மற்றெல்லாத் துன்பங்களைக் காட்டிலும் அதிக மாக ஏற்பட்டுவிட்டது. விவாக முறையைச் சில தேசங்களில் நரகம்போலே செய்து விட்டார்கள். தெய்வம் கொடுக்கும் இன்பத்தை மனிதர் அறியா மையாலும் பாபசிந்தையாலும் துன்பமாக மாற்றிக் கொள்ளுகிறார்கள்.

தெய்வத்தை நம்பி மேற்படி மூன்றனுள் எது வும் இன்றியமையாத தில்லையென்று கொண்டு, வருவதுதானே வருமென்று சொல்லி, எல்லாம் தெய்வத்தின் செய்கையாதலால் நமக்கெவ்வித மான பொறுப்புமில்லை யென்று நடப்பதே விடுதலை இன்பம், துன்பம் எது நேர்த்தாலும் சரியென்று மனக்கவலையை ஒரேயடிாக நெருப்பிலே போட்டுக் கொளுத்திவிட்டு தெய்வத்தின் நினைப்பே கதி யென்று நிற்பது விடுதலை. எல்லாத் தருமங்களையும் விட்டு, என்னையே சரணடைக’ என்று கீதையும் சொல்லிற்று.

இந்த விடுதலை பெற்றவன் பண்டாரமாகிக் கந்தையுடுத்துப் பிச்சை வாங்கித் தின்பானென்று சில பாமர ஜனங்கள் நினைக்கிறார்கள். அது முற் றிலும் தவறு. ஆயிரத்திலொரு ஜீவன்முக்தன் பண்டார வழியிலே சென்றாலும் செல்லக்கூடும். ஆனல் அதுவே மார்க்கமென்று நினைத்துவிடக் கூடாது. ஜனகன் ஜீவன் முக்தி பெற்று ராஜ்ய மாண்டான். அர்ஜுனனும் அப்படியே. ரிஷிக ளெல்லாரும், பெண்டு பிள்ளைகளுடன் சுகமாக வாழ்த்தார்கள். விடுதலை பெற்றவர் எந்தத் தொழில் செய்தாலும் செய்வார்கள். ஆளுல் அந்தரங்க நம்பிக்கை தெய்வமொன்றினிடத்தேயே செலுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/267&oldid=605598" இலிருந்து மீள்விக்கப்பட்டது