பக்கம்:பாரதித் தமிழ்.pdf/268

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதல் 269

வாழ்வார்கள். “எத்தொழிலைச்செய்தாலும், ஏதவத் தைப்பட்டாலும், முக்தர் மனமிருக்கு மோனத்தே’ என்பது முன்னேர் வாக்கு. பரனே நினைந்து முன் மூன்றையும் விட்டு விடுதல் இன்பமென்று ஒளவை கூறினுள். பற்று விட்டிருப்பதே விடுதலை. உள்ளத் துறவே துறவு. உள்ளத்துறவுடைய மனிதனை நாம் என்ன அடையாளத்தாலே கண்டு பிடிக்கலாம்? பக்தி முதிர்ச்சிக்கு எது தவருத லக்ஷணம்? ‘அஞ்சாதே!” என்றது வேதம் பயம் நீங்கி யிருப் பதே விடுதலைக்கு லக்ஷணம். ஒருவன் உண்மை யாகவே தெய்வத்தை நம்பினுளு, வீணுக்குச்சொல்லு கிருஞ என்பதை அறிய வேண்டுமானுல் ஆபத்து வேளையிலே பார்க்க வேண்டும். ஆபத்து நேரும் போது நெஞ்சு நடுங்காம லிருப்பவன் ஞானி, பக் தன், முக்தன். மரணத்துக் கஞ்சாதவன் தெய் வத்தை உண்மையாகச் சரணடைந்தவன். தெய் வத்தை நம்பினுல் தீமை நமக்கு வாராதென்பதை ப்ரத்யக்ஷ ஞானமாகக் கொண்டு ஜீவன் முக்தர் எந்தப் பதவியிலிருந்த போதிலும் நிகரற்ற வீரராக விளங்குவார்.