பக்கம்:பாரதித் தமிழ்.pdf/270

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தெலுங்க மஹர் சபை 271

தெலுங்குமுறை. நமது பாஷையில் “கவனம்” (ஆழ்ந்துநோக்குதல்), ஜொகுஸ் எச்சரிக்கை”, “துரை’, ‘வாடிக்கை,” “கொஞ்சம்’ முதலிய பதிற் றுக்கணக்கான தெலுங்குச் சொற்கள் சேர்ந்திருக் கின்றன. தெலுங்கர் தமிழ் நாட்டை ஆண்டபோது, அநீதியே கிடையாது, தமிழ்ருக்கு வேறு நீதி தெலுங் கருக்கு வேறு நீதி என்ற பேதம் கிடையாது. தெலுங்கு ஜாதி, ராஜ நீதியிலே நிபுணத்தன்மை உடையது.

மேற்படி கொள்கைக்கு நல்ல திருஷ்டாந்தமாக, இக்காலத்திலும்கூடத் தெலுங்கு தேசத்தார் தமிழ ரைக் காட்டிலும் ராஜாங்க வ்யவஹாரங்களில் தீவ்ர புத்தி செலுத்துகிறார்கள். ஆனல் நமக்குள் ஜாதி பேதமிருக்கிறது என்றால் ஜாதிபேதம் இந்தியா வில் மாத்திரமில்லை, உலகத்தில் எல்லா தேசங்களி லும் இருக்கிறது. இந்தியாவில் கொஞ்சம் தீவ்ர மாகவும், விநோதமாகவும், மாற்றுவது கஷ்டமாக வும் இருக்கிறது. இப்போது பூமி முழுவதிலும் நடந்து வரும் மஹாப்ரளயத்தில் இந்த ஜாதிபேதம் தவிடு பொடியாய்ப் போய்ப் புதிய மாதிரி உண்டா கும். இதுவெல்லாம் ஏன் சொல்ல வந்தேனென்றால், தமிழ்நாட்டுஜனங்கள் வீண்சண்டைகளிலேபொழுது போக்குகிரு.ர்கள். தெலுங்கர் ஜனபிவிருத் திக்கு வழியாகிய நல்ல உபாயங்களிலே புத்தி செலுத்தி வருகிரு.ர்கள். சுதேசிய விஷயத்தில் இப்போது தெலுங்கருக்குள் இருக்கும் பக்தி சிரத்தையிலே நாலிலொரு ப்ங்குக்ட்த் தமிழ் ஜனங்களிடம் இல்லை. சென்ற வெள்ளிக் கிழமையன்று கூட மேற்படி நெல் லூர் ஆந்த்ர மஹாசபைப் பந்தலில் வந்தேமாதரம் என்ற கோஷம் அபரிமிதமாக இருந்ததென்று தந்தி சொல்லுகிறது. கொஞ்ச காலத்துக்கு முன்பு, கூட லூரில் கூடிய மாஹாணசபையில் ‘வந்தேமாதரம்'