பக்கம்:பாரதித் தமிழ்.pdf/271

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


272 பாரதி தமிழ்

பாட்டுக் கூடப் பாடவில்லை யென்று கேள்விப்பட் டேன். தெலுங்கு ஜில்லாக்களில் ஒரு சபைகூட அப்படி நடந்திராது. இது நிற்க,

மேற்படி சபையில் பூரீ வேங்கடப்பய்யா சபா நாயகராகப் பேசிய வார்த்தைகளின் ஸாரம் பின் வருமாறு:

1. தெலுங்கு தேசத்தைத் தனிமாகாணமாகப் பிரிக்க வேண்டும்.

2. இந்தியாவுக்குத் தன்னுட்சி கொடுக்க வேண்டும். -

3. இயன்றவரை, இந்தியா முழுவதையும், பாஷைகளுக்குத் தக்கபடி வெவ்வேறு மாகாண மாக்க வேண்டும். அதாவது, மதராஸ், பம்பாய், ஐக்ய மாகாணம், மத்ய மாகாணம், பஞ்சாப், பங்காளம் என்ற பிரிவுகளை மாற்றித் தமிழ்நாடு, தெலுங்குநாடு, மாராட்டிய நாடு, கன்னட நாடு, ஹிந்துஸ்தானம், வங்க நாடு என்று பாஷைக்கிரமப் படி வகுக்க வேண்டும்.

4. ஸ்வபாஷைகளில் கல்விப் பயிற்சி செய் விக்க வேண்டும். ராஜ்ய காரியங்களும் இயன்ற வரை ஸ்வபாஷையில் நடக்க வேண்டும்.

மேற்படி நாலம்சங்களில் முதலாவது, மூன்றா வது, நாலாவது இம்மூன்றும் ஒரு பகுதி, இரண்டா வது மற்றாெரு பகுதி. இரண்டாவது தாய்ப் பகுதி: மற்றவை கிளைப் பகுதிகளாகும்.

என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கண்ட கொள்கை யெல்லாம் நியாயமென்றே தோன்று கிறது. ஆலுைம், இந்த ஸமயத்தில் ஆந்திரரைத் தனிப் பிரிவாக ருஜுப்படுத்துவதைக் காட்டிலும்,